Tuesday 31 July 2012

போகப் போகத் தெரியும் - 19


 
   மீனா கண்விழித்த பொழுது மணி மாலை மூன்று. ஊரில் ஒரு சத்தமும் இல்லை.
   டாக்டர் கொடுத்த மருந்தைச் சாப்பிட்டுப் படுத்தவள் தான். இப்பொழுது தான் கண்விழித்தாள். ஆனால் காலையில் தேர் ஊர்வலத்திற்குப் பிறகு மக்கள் கூட்டம் திருவிழா ஒலிப் பெருக்கியில் ஒலித்த பாடல்கள் ஒயிலாட்டம் மயிலாட்டம் கரகாட்டம் என்று ஒலித்த வாத்தியங்களின் ஓசை.. எதுவும் இப்பொழுது இல்லை!
   அறிவழகியிடம் கேட்டாள்.
   'எல்;லாரும் மாடுபுடிக்கிற வெள்ளாட்டு வெளையாட ஊரு எல்ல ஐயனார் கோயில்கிட்ட போய் இருக்காங்க." என்றாள் அவள்.
   'அப்ப நானும் போய்ப் பாக்கறேன்மா."
   மீனா கெஞ்சலாகக் கேட்டதும் 'சரி போ" என்றாள். வருடத்திற்கு ஒரு முறை வருவது தானே திருவிழா.. என்ற எண்ணத்தில்.
   மீனா சக்திவேல் வாங்கித்தந்த சற்றுப் பெரியதாக இருந்த சுரிதாரை அணிந்து கொண்டு மறக்காமல் கையில் கட்டுத் தெரியாதவாறு துப்பட்டாவைத் தொங்கவிட்டுக் கொண்டு பின் குத்திக் கொண்டாள். அறிவழகி அவள் தலையை ஒதுக்கிவிட்டு முகத்தை துடைத்துப் பொட்டு வைத்துவிட்டாள்.
   'அம்மாடி.. கைய ரொம்ப ஆட்டாத. தையல் போட்டிருக்கு. தனியா ஒரு எடமா பாத்து நின்னுக்கோ.. இன்னா.."
   மகளை வாசல்வரை வந்து அனுப்பி வைத்தாள். அவளுக்கு ஆஸ்துமா தொல்லை இல்லையென்றால் அவளும் கூட வந்திருப்பாள். ஆனால் விளையாட்டு மைதானத்தில் துர்சு பறக்கும். அதன் தொல்லையால் இவள் தொல்லையடைய வேண்டி வரும். தன் நிலையறிந்தவள் வீட்டிலேயே தங்கிவிட்டாள்.
   மீனா ஊர் கோவிலைத்தாண்டி மண்சாலையில் நடந்தாள். விளையாட்டு மைதானத்தில் ஒலிப் பெருக்கியில் பேசுவது காற்றுவாக்கில் விட்டுவிட்டுக் கேட்டது.
   'இதோ வந்துவிட்டது. ஆத்தூர் வீரக்காளை! இதை அடக்கபவர்க்குச் சக்திவேல் ஐயா கொடுக்கும் பத்தாயிரம் ரூபாய் பணமும் மாட்டின் கொம்பில் கட்டப்பட்டிருக்கும் வெள்ளிக் கொலுசுவும் சொந்தம்! அடக்குபவர் அடக்கலாம்."
   இரண்டாவது முறை அறிவிப்பு மிக நன்றாகவே கேட்டது. மக்களின் கை தட்டலும் விசில் சத்தமும் ஆர்பாட்டமும் தெளிவாகக் கேட்டது. மீனா உற்சாகத்துடன் நடையை எட்டிப்போட்டாள்.
   ஏதோ ஓர் உள் உணர்வு! தன்னை யாரோ பின் தொடர்வது போல்..
   திரும்பிப் பார்த்தாள். அவள் யூகம் சரியாகவே இருந்தது.
   வேந்தனும் அவன் அடியாட்களும் தான்! அவளுக்கு உடம்பில் ஓடின இரத்தம் எல்லாம் தலைக்கு ஏறிவிட்ட அதிர்ச்சி!
   இவனிடம் சிக்கிக் கொள்ள கூடாது. இன்னும் சற்றுத் தூரத்தில் தான் மைதானம்! அங்கே நிறையப் பேர் இருப்பார்கள். கூட்டத்தில் கலந்து விட்டால் இவனிடமிருந்து தப்பித்து விடலாம்.
   முடிவெடுத்ததும் ஓடத்துவங்கினாள். இவள் ஓட ஆரம்பித்ததும் வேந்தனும் விரட்டத் துவங்கினான். மீனா புயல்காற்றையும் தோற்கடிக்கும்படி ஓடினாள்! கூட்டம் சற்றுதொலைவில் தென்பட்டது. இன்னும் அதிகமாக வேகமெடுத்தாள். கண்மண் தெரியாமல் ஓடியவள் யாரோ ஒருவர் மீது மோதி பிறகு தான் நின்றாள்.
   மனது அப்பாடா என்றது. ஓடிவந்ததில் மூச்சிறைத்தது. நன்கு மூச்சைவாங்கி வெளிவிட்டுக் கொண்டு பிறகுதான் தான் யார் மீது மோதினோம் என்று நிமிர்ந்து பார்த்தவளுக்கு மீண்டும் அதிர்ச்சி!
   வெற்றிவேல்!!!
   அவனும் அவளை அதிர்ச்சியாகப் பார்த்தான்.
   'ஆமா.. நீ.. மீனாயில்ல? ஏன் இப்படி ஓடியாந்தே..?"
   அவள் திரும்பித் தன்னைத் துரத்தியவர்களைத் தேடினாள். அங்கே வேந்தனும் அவனது அடியாட்களும் வெற்றிவேலுவைப் பார்த்ததும் கூட்டத்தில் ஒருவராக நழுவி மறைந்தார்கள்!
   மீனாவிற்கு இப்பொழுது தான் மூச்சியைச் சரியாக விட முடிந்தது. வெற்றிவேலுவைப் பார்த்தாள். அவன் இவளை யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
   இவனைப் பார்த்ததும் அவர்கள் ஓடிவிட்டார்கள் என்றால் அவர்கள் இவனுக்குப் பயப்படுகிறார்கள்! மனது கணக்கு போட்டது.
   'வெற்றிவேல்.. நான் உங்கக்கூடவே இருக்கட்டுமா..?"
   'ஓ.. இறேன்! நா வேணாம்ன்னு சொல்லமாட்டேன். குளுகுளுன்னு ஒரு பொண்ணு பக்கத்துல இருந்தா மனசு வேணாம்ன்னா சொல்லும்?"
   அவன் சிரித்தான். அதில் இலேசான குரோதம் தெரிந்தது. அவளுக்கு அவன் அப்படி சிரித்துப் பேசியவிதம் பிடிக்க வில்லை தான். ஆனால் வேற வழி???
   'ஐயே.. அசடு வழியிது. தொடச்சிகங்க." என்றாள் இவளும் சிரிப்பை வரவழித்து கொண்டு.
   'சரி. வா." அவன் சொல்லிவிட்டு முன்னால் நடக்க இவள் பின் தொடர 'வெற்றிவேல் ஐயா.. வெற்றிவேல் ஐயா.." என்று சொல்லிக் கூட்டம் அவனுக்கு வழிவிட்டது.
   அங்கே மேடைக்கு அருகில் போடப்பட்டிருந்த சவுக்கு மரக்கட்டை வேலியின் அருகில் நின்றான் வெற்றிவேல். அவனுடன்  மீனாவும்!
   மீனா கண்களால் சக்திவேலைத் தேடினாள். சக்திவேலும் அவன் நண்பர்களும் இன்னும் இரண்டு ஊர் பெரியவர்கள் கண்மணியின் அப்பா சண்முகம்.. அனைவரும் மேடையில் அமர்ந்திருந்தார்கள்.
   சக்திவேலுவும் அவள் நண்பர்களும் தன்னைக் கோபமாக முறைப்பது நன்றாகப் புரிந்தது மீனாவிற்கு. அவர்களுக்கு இவள் வெற்றிவேலின் அருகில் இருப்பது பிடிக்காது! அவளுக்கும் தான் பிடிக்கவில்லை! ஆனால் என்ன செய்வது? அவனை விட்டு நகர்ந்தால் வேந்தனிடம் அகப்பட்டுக் கொள்ளவேண்டியது தான்.
   அவளால் அப்பொழுது ஒரு பெருமூச்சி மட்டுமே விட முடிந்தது.
   'இதுவரை ஆறு பேரைத் தூக்கி எறிந்து விட்டது எங்களூர் வீரக் காளை! எங்களூர்க்; காளையை அடக்க வீரன் எவனும் இல்லையா..?"
   சசிதரன் தான் ஒலிபெருக்கியில் காளையைப் பற்றிப்பெருமையாகக் கத்திப் பேசினான். சத்தம் காதைக் கிழித்தது.
   'வெற்றிவேல்.." காளையைப் பார்த்துக் கொண்டிருந்தவனை மீனா கூப்பிட்டாள்.
   'என்ன..?"
   'நீங்க எதுக்கு மேடையில போய் ஒக்காரல? நீங்களும் ஊர் பெரிய மனுஷன் தான?"
   'என்னப் பொருத்த வரைக்கும் மீனா.. மேடையில ஒக்காந்து வேடிக்க பாக்குறவங்க தைரியமில்லாதவங்கன்னு நெனைக்கிறவன் நான்." என்றான் அலட்சியமாக.
   அவனுடைய பதில் அவளைச் சிரிக்கத் தூண்டியது. இருந்தாலும் சிந்திக்கவும் தூண்டியது. சிரித்துக் கொண்டே சிந்தித்தாள்.
   'ஏன் சிரிக்கிற?" சற்றுக் கோபமாகக் கேட்டான்.
   'தோ ஒரு நிமிஷம் இருங்க.." சொல்லிவிட்டு மேடைமீது மைக்முன் பேசிக் கொண்டிருந்த சசிதரனைக் கை தட்டிக் கூப்பிட்டாள். அவன் பார்த்ததும் சைகையால் மைக்கைக் கேட்டாள். உடனே கொடுத்தான்.
   'இங்கிருக்கிற எல்லாருக்கும் ஒன்னு சொல்லுறேன். நமது வெற்றிவேல் ஐயா.. மேடையில உட்கார்ந்து விளையாட்டை ரசிக்கிறவங்க தைரியமில்லாதவங்கன்னு சொன்னார். அதை பொய் என்று நிறுபிக்க நமது சக்திவேல் அவர்கள் ஆறு பேரை தூக்கி எறிந்த இந்தக் காளையை அடக்கி அதோட கொம்புல இருக்கிற கொலுசுவை எனக்கு பரிசாக தரும்படி கேட்டு கொள்கிறேன்." என்றாள் சத்தமாக.
   அங்கே ஒரே அமைதி! அனைவரின் கண்களும் மீனாவையே பார்த்தன! மேடையிலிருந்து எழுந்து வந்த சேகர்..
   'மீனா ஒனக்கு அறிவிருக்குதா..? எங்கையாவது நம்ம ஊர் காளைய நாமலே அடக்கலாமா..? முண்டம் மாதிரி பேசாத. உம்பேச்ச ஒடனே வாப்பஸ் வாங்கு." என்றான் கோபமாக.
   'நம்ம ஊர்க் காளையா இருந்தால் என்ன? அதை அடக்கத்தான் இங்கே யாரும் இல்லையே..? இந்தக் காளையைச் சக்திவேல் அடக்கத்தான் வேண்டும்." என்றாள் குரலை உயர்த்தி!
   இப்பொழுது அனைவரும் சக்திவேலைப் பார்த்தார்கள். அவன் கண்கள் சிவக்க அமர்ந்தே இருந்தான்.
   மீனாவும் அவனைப் பார்த்தாள். பிறகு சொன்னாள்.
   'சக்திவேல் மட்டும் இந்தக் காளையை அடக்கி அதன் தலையில் இருக்கும் கொலுசுவை எனக்குப் பரிசாகத் தரவில்லை என்றால் இனி என் வாழ்நாளில் கொலுசே போடமாட்டேன்னு இந்தக் கூட்டத்தில் சபதமாக சொல்கிறேன்." என்றாள்.
   இப்பொழுது சக்திவேல் ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு எழுந்தான். வேட்டியை மடித்துக் கீழ்பாய்ச்சியாகக் கட்டினான். கூட்டம் கை தட்டிச் சந்தோச ஆரவாரம் செய்தது.
   அவன் மைதானத்தில் இறங்கியதும் மாடு மிரளப் பலப்பல ஓசைகளை எழுப்பினார்கள். மாட்டின் வாலைப்பிடித்து முறுக்கி விட்டார்கள். காளையும் கோபத்துடன் காலால் மண்ணைத் தோண்டியது! கோபத்துடன் சக்திவேலுவின் எதிரில் அவனைக் குத்த வருவது போல் மிக வேகமாக வந்தது.
   சக்திவேலுவும் மாட்டை அடக்கத் தயாராக இருந்தான். அவன் கண்களும் கைகளும் கோபத்துடன் காத்திருந்தது. ஆனால் காளை..
   அவனெதிரில் வந்ததும் பேசாமல் நின்று விட்டது!
   சக்திவேல் ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு மாட்டின் அருகில் வந்து அதன் தலையில் இருந்த கொலுசுவை எடுத்து கொண்டு வந்து மீனாவின் முன் கோபமாக நீட்டினான்.
   மீனா அதை வாங்கவில்லை. அவள் காளை இப்படி செய்யும் என்று எதிர்பார்க்கவில்லை. அவள் மட்டுமல்ல. அனைவரும் தான்! அதனால் பேசாமல் நின்றிருந்தாள். அவனே அவள் கையைப் பிடித்து அந்த கொலுசுவைத் திணித்தான். மீனா சட்டென்று அவன் கையைப் பற்றினாள்! ஆனால் அவன் அவள் கையை உதறிவிட்டு நடந்தான். அவளுக்கு ஏமாற்றமாக இருந்தது.
   வெற்றிவேல் அவளைக் கேலியாகப் பார்த்துவிட்டு சொன்னான்.
   'என்ன மீனா நீ? புலிவேட்டைக்கி போறவனைப் போய் முயல் புடிக்க அனுப்பி அவனோட வீரத்துக்கு இழுக்கு வர்ற மாதிறி செஞ்சிட்டியே.. ஒனக்கு கொலுசு வேணும்ன்னு அவன்கிட்ட தனிமையில கேட்டிருந்தா அவன் தங்கத்துல கொலுசு செஞ்சி போட்டிருப்பான். நீ என்னன்னா.. இப்படி அவுமானப் படுத்திட்டியே..!" என்றான். அவன் குரலிலும் வருத்தம் தெரிந்தது.
   அவள் ஒரு நிமிடம் யோசித்தாள். பின்பு மைக்கில் சொன்னாள்.
   'நமது சக்திவேலுவின் அன்புக்கு மனிதர்கள் மட்டுமல்ல. விலங்குகளும் கட்டுப்படும் என்பதை நிறுபித்துக் காட்டி விட்டார். அவருடைய வீரம் நாம் அனைவரும் அறிந்தது தான்! இருந்தாலும் வீரத்ததைவிட விவேகம் சிறந்தது. விவேகத்தைவிட அன்பு சிறந்தது. அன்பு கொடுக்கும் தண்டனை அடிபணிவது தானே.. இதோ இந்த காளை.. அவருடைய அன்புக்கும் வீரத்திற்கும் விவேகத்திற்கும் அடிபணிந்து விட்டது. இதுவே மிகப்பெரிய சாட்சி!" என்றாள்.
   கூட்டம் கைதட்டி சந்தோஷ ஆரவாரம் செய்தது.
   அடுத்ததாக அங்கே நுழைந்தது மாந்தூர்க் காங்கேயன் காளை!
   'இத அடக்கறவன் வீரன் மீனா.." என்றான் வெற்றிவேல்.
   'நீங்க இத அடக்குறீங்களா..?" மீனா கேட்டாள்.
   'நானா..?"
   'ஏன் முடியாதா..? பயமா..?"
   'பயமெல்லாமில்ல.. ஆனா வேணாம்."
   'இல்ல வெற்றிவேல். நீங்க இந்தக் காளைய அடக்கணும். நீங்க இத அடக்கினாத்தான் வெற்றிவேல். இல்லைன்னா வெறும் வேல் தான்!" என்றாள் அலட்சியமாக!
   அவன் இவளை கோபமாக முறைத்துவிட்டுச் 'சரி. அடக்கிக் காட்டுறேன்." என்றான்.
   அரைமணி நேரத்திற்கும் அதிகமாகவே ஆனது. காங்கேயன் காளை சரியான முரட்டுத்தனமாக வளர்க்கப்பட்ட காளை போலும்! வெற்றிவேலுவையே இரண்டு முறை தூக்கி எறிந்தது. மேடையில் அமர்ந்திருந்த அனைவரும் எழுந்துநின்று பார்த்தார்கள்.
   மிகவும் கடினப்பட்டு அடக்கினான் வெற்றிவேல்! அதன் தலையில் இருந்த சங்கிலியைக் கொண்டுவந்து மீனாவிடம் நீட்டினான். மீனா அதிர்ச்சியாக நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். அவள் மட்டுமா..? அனைவரும் தான்!
   'இந்தா மீனா. இந்தச் செயினை நீயே வச்சிக்கோ. நீ தான இந்தக் காளைய அடக்கசொன்னே..? அடக்கிட்டேன். போதுமா..? இந்தா."
   அவள் கையைப்பிடித்து திணித்தான். மீனா அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தாள். அவன் மீசையை முறுக்கினான். அதில் குரோதம் இருந்தது. இவள் ஒரு நிமிடம் யோசித்தாள்.
   'வெற்றிவேல். இந்த செயினைக் கண்மணிகிட்ட கொடுங்க. நிங்க வெற்றி பெற்றதின் வெற்றியின் சின்னமாக நான் கொடுத்தனுப்பியதாக கண்மணியிடம் சொல்லி குடுங்க."
   அவன் கையைப்பிடித்து கையில் வைத்தாள். அவனும் எதுவும் எதிர்ப்புச் சொல்லாமல் வாங்கிக்கொண்டான். இலேசாக இருளத் துவங்கியது.
   வெற்றிவேலுவை அவன் ஊர்க்காரர்கள் ஆரவாரத்துடன் தூக்கிக்கொண்டு போனார்கள். கூட்டம் கலைந்தது. மீனா மேடையை பார்த்தாள். ஆடாத அரங்கம் யாருமில்லாமல் அமைதியாக இருந்தது. கண்கள் ஏமாற்றத்துடன் சக்திவேலைத் தேடின. கண்கள் மட்டுமல்ல மனதும் ஏமார்ந்தது.
   அவள் அங்கிருந்த ஊர்க் காரர்களுடன் சேர்ந்து நடந்தாள்.
   ஊர் துவக்கத்தில் கோவில் வந்ததும் தான் அவளால் நிம்மதியாக மூச்சுவிட முடிந்தது. அன்று திருவிழாவிற்காக ஒரு மெல்லிசை கச்சேரி ஏற்பாடு செய்திருந்ததால் அனைவரும் கச்சேரித் திடலை நோக்கி முண்டியடித்துக் கொண்டு நடந்தனர்.
   மீனா அங்கிருந்த திருவிழா கடைகளைப் பார்த்தபடி நடந்தாள். பொய் சூரியன்கள் தன்னைச் சுற்றிமட்டும் வெளிச்சத்தைத் தெளித்து கொண்டதால் மற்ற இடங்கள் கறுமையைப் பூசிக் கொண்டிருந்தது.
   ஓர் இருள் சூழ்ந்த இடம்! அவள் எதிர்பார்க்காத நேரத்தில் ஒரு முரட்டு கை அவள் வாயை அழுத்தி போர்த்தி மறுகையால் அவளை இழுத்து ஓரிடத்தில் தள்ளியது! அவள் விழுந்த வேகத்தில் கையில் இருந்த காயத்தின் தையல் பிரிந்திருக்க வேண்டும்! அப்படி ஒரு வலி! ஆனால் அவள் அதைப் பொருட்படுத்தாமல் விழுந்த வேகத்தில் எழுந்து நின்றாள்.
   அங்கே நான்கு ஆண்கள்! அதில் ஒருவன் வேந்தன்! அந்த இருட்டான இடத்திலும் அவனின் உருவமும் உடல் அமைப்பும் அவளாள் உடனே கண்டுபிடிக்க முடிந்தது.
   அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பார்கள்! அவள் அவனை நினைத்தே பயந்து இருந்ததால் அவளால் அந்த இருட்டில் கூட அவனைக் கண்டுபிடித்து விட முடிந்தது.
   இப்பொழுது அவள் அவனைப்பார்த்து பயப்படவில்லை! குலைக்கிற நாய் கடிக்காது என்பார்கள். ஆனால் இவன் நாய் இல்லையே..
   'ஏண்டி.. சத்திவேலு கொலுசு குடுத்தா வாங்கிக்கி;வே.. ஆனா வெற்றிவேலு செயினு குடுத்தா வாங்கிக்க மாட்டியா..?" வேந்தன் கர்ஜுத்தான்.
   'சக்திவேல நா விரும்புறன். அதனால அவரு தந்த கொலுச வாங்கிகினேன்." தைரியமாகச் சொன்னாள்.
   அவனுக்குக் கோபம் வந்திருக்கவேண்டும்! அதனால் தான் அவன் இப்படி கோபமாகச் சொன்னான்.
   'ஏய்.. இன்னொறு வாட்டி சத்திவேல விரும்பறேன்னு சொல்லாத."
   'ஏன்.. நா அவரத்தான் விரும்பறேன். அவரத்தான் கல்யாணம் பண்ணிக்கபோறேன்." என்றாள்.
   இதை கேட்டதும் அவன் சத்தமாக கைகொட்டிச் சிரித்தான். அவனுடன் மற்றவர்களும் சிரித்தார்கள்! மீனா அவர்களின் செய்கையை கோபமாகப் பார்த்தாள். அவன் சிரிப்பதை நிறுத்திவிட்டுச் சொன்னான்.
  'ஏய் மீனா.. சக்திவேல் உன்ன கட்டிக்குவான்னு பகல் கனவு காணாத. அவனாவது உன்ன கல்யாணம் கட்டிக்கிறதாவது? தோ பார். அவன் உன்ன மாதிரி அனாதைய எல்லாம் கட்டிக்க மாட்டான். அவனோட அம்மா அவனுக்குச் சொந்தத்துல தான் பொண்ணு அமையும்ன்னு ஊர்ஊரா வலவீசி தேடுறாங்க. அவனோட அந்தஸ்துக்கு நீயெல்லாம் எந்த மூல? போயிம் போயிம் ஒரு அனாதய்யா கட்டிக்குவான்? ஒனக்கு இப்டில்லாம் ஆச வரலாமா? ஒன்னோட தகுதி என்னன்னு ஒனக்குத் தெரியாதா..? ஆச படவும் ஒரு அளவு வேணாம்?"
   'நா ஒன்னும் அவரோட பணம் காச பாத்து ஆசப்படல."
   'வேற எதுக்கு ஆசபட்டியாம்? அவனோட அழகையும் வீரத்தையும் பாத்தா ஆசபட்ட? அப்டி பாத்தா அவன எத்தனையோ பொண்ணுங்க விரும்புறாங்க. அவனால எல்லாரையும் கட்டிக்க முடியுமா..? அவனுக்கு எல்லாப் பொண்ணையும் போலத்தான் நீயும். இல்லாட்டி நீ போடவந்த மாலைய கழுத்துல வாங்காம கையில வாங்குவானா ஒரு ஆம்பள..? "
   அவன் அப்படிக் கேட்க மீனா யோசித்தாள். இதுதான் நல்ல தருணம் என்று வேந்தன் அவள் இடக்கையைப் பற்றினான்.
   'ஏய்.. தோபாரு. எனக்கு உன்னைய ரொம்ப புடிக்குது. உன்ன வற்புருத்தி அடையணுமின்னு எனக்கு ஆசயில்ல. நீ சம்மதிச்சா நீ இப்பவே எங்கூட வந்துடு. என்னோட ஆத்தா அப்பன்கிட்ட சொல்லி நா நாளைக்கே உன்னைய கல்யாணம் பண்ணிக்கிறேன்." என்றான் சற்றுக் தணிவானக் குரலில்.
   அவன் கையை உதறினாள். 'என்ன வுடு. நா சக்திவேலத் தவர வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்." சத்தமாகச் சொன்னாள்.
   அவள் அப்படிச் சொன்னதும் அவள் கன்னங்களில் மாறிமாறி அறைந்தான். அவளுக்குக் கன்னங்கள் எறிந்தன.
   'இவ்ளோ பொறுமையா சொல்றேன். நி சம்மதிக்க மாட்டே.. உன்னையெல்லாம்.."
   அவன் சொல்லிக் கொண்டே அவள் கையை இறுக்க.. இலேசான கசகசப்பை உணர்ந்தான். உடனே அவள் கையை விட்டுவிட்டு தன் கையைப் பார்த்தான். அவன் கையெல்லாம் இரத்தம்! மீனாவின் காயத்திலிருந்து கட்டையும் மீறி வழிந்த இரத்தம்! அதைக் கண்டதும் அவளுடைய துப்பட்டாவை விலக்கிப் பார்த்தான். கண்களிள் அதிர்ச்சி!
   'என்னடி இது..?" கோபமாகவும் அதிர்ச்சியாகவும் கேட்டான்.
   'அண்ணே.. காலையில சத்திவேலு என்ன தொரத்திக்கினு வந்தான். அப்போ ஒரு பொண்ணு காப்பாத்துச்சின்னு சொன்னயில்ல? அது இந்த பொண்ணுதான்! அப்போபட்ட காயம் தான் இது." என்றான் அவனருகில் இருந்தவன்.
   மீனாவும் அவனை அப்பொழுது தான் பார்த்தாள். வேந்தன் அவளை யோசனையாகப் பார்த்துவிட்டு சொன்னான்.
   'ஏய் மீனா.. இப்ப உன்னைய உடுறேன். ஆனா என்னைக்கி இருந்தாலும் நீதான் எனக்கு பொண்டாட்டி. இன்னொறு வாட்டி சத்திவேலத் தான் கட்டிக்குவேன் யார்கிட்டயும் சொல்லாத. அப்புறம் கொன்னுபுடுவேன்.. அவன் உன்ன மாதிரி அனாதைய ஏறெடுத்துக்கூடப் பாக்கமாட்டான். போ.." அந்த இடத்தைவிட்டுப் பிடித்துத் தள்ளினான்.
   மீனா வெளியில் வந்து விழுந்தாள். யாராவது தன்னைப் பார்க்கிறார்களா என்று கண்கள் தேடின! அந்த இடமும் அனாதையாக இருந்தது!
   அவள் துப்பட்டாவை தன் காயத்தின் மீது சுற்றிக் கொண்டு தன் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். காயத்தை விட மனது அதிகமாக வலித்தது. ஊருக்குள் ஜன சந்தடி இருந்த இடத்தில் ஒரு சிறுவன் அவளிடம் வந்து சொன்னான்.
   'மீனா அக்கா.. உன்னைய உன் பிரன்ஸ்ங்க வரசொல்லிச் சொல்லச் சொன்னாங்க."
   மீனா அவனிடம் 'சரி" என்று சொல்லிவிட்டு ஊர்ப் பள்ளிக்கூடத்தை நோக்கி நடந்தாள்.


  ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²
   வகுப்பறையில் அவளுடைய ஆறு நண்பர்களுடன் சக்திவேலுவும் இருந்தான். ஒவ்வொருவர் முகத்திலும் கோபக்கனல் வீசியது.
   மீனா பேசாமல் சென்று அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டாள்.
   'ஏன் மீனா.. எங்களயெல்லாம் அவமானப் படுத்தணும்ன்னே நீ இன்னைக்கி இப்படியெல்லாம் நடந்துக்கினியா..?" சேகர் கோபமாகக் கேட்டான்.
   'ஏன்.. இப்போ என்ன ஆயிடுச்சி..?" மீனா மெதுவாகக் கேட்டாள்.
   'என்ன ஆச்சா..? அந்த வெற்றிவேலுக்கும் நம்மூர் காரங்களுக்கும் ஆகாதுன்னு தெரியுமில்ல..? அப்டி இருக்கும் போது நீ ஏன் அவன்கூட போய் நின்னே..?"
   'சேகர் மொதல்ல நா உன்ன ஒன்னு கேக்கறேன். பதில் சொல்லு. என்னோட எடத்துல ஓன் தங்கையோ.. இல்ல.. ஒனக்கு வேண்டிய பொண்ணோ இருந்திருந்தா என்ன செஞ்சியிருப்ப?"
   'போயி ஒரு அற அறைஞ்சி கையோட அவள இழுத்துகினு வந்திருப்பேன்." என்றான் கோபமாக.
   'நீ என்ன செஞ்சிறுப்ப சரண்..?"
   'அவனமாதிரி அடிக்கலன்னாலும்.. போய்க் கையோடக் கூட்டிக்கினு வந்திருப்பேன்." என்றான் சரண் என்றழைக்கும் சரவணன்.
   'அப்போ நீங்க யாரும் ஏன் என்ன அப்படி வந்து கூப்பிடலை..?" மீனா மெதுவாகக் கேட்டாள்.
   அவர்கள் அதிர்ச்சியாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அவர்களைப் பார்த்துவிட்டு அவளே தொடர்ந்தாள்.
   'எனக்கு தெரியும். உங்க தங்கச்சியோ.. உங்களுக்கு வேண்டிய பொண்ணோ இருந்திருந்தா.. கண்டிப்பா உரிமையா அவள காப்பாத்தி இருப்பிங்க. இந்த மீனா யாரு? அவ நமக்கு என்ன ஒறவா? ஏதோ ஒரு அனாத பொண்ணுதானே.. அவ எப்படி போனா நமக்கென்னன்னு தான என்ன எல்லாரும் சேந்து விட்டுட்டீங்க? ஆனா நா உங்கள அப்படி நெனைக்கல. ஒரு கழுகுகிட்டர்ந்து தப்பிச்சி வந்து நல்ல பாம்புகிட்ட சிக்கி அதுக்கு மகூடம் வாசிச்சி கொண்டிருந்தேனே.. ஐயோ என்ன யாராவது வந்து அழைச்சிக்கினு போவமாட்டீங்களான்னு ஏங்கிகினு இருந்தேனே..
   பரவாயில்ல. என்னோட தகுதி என்னன்னு உங்களோட எதிரி எனக்கு நல்லா பாடம் சொல்லி குடுத்திட்டான்;. நானும் நல்லா புரிஞ்சிகினேன். ஏதோ.. இவ்ளோ சீக்கிறம் உங்கள எல்லாம் புரிஞ்சிகினேனே. இதுவே போதும். நா கௌம்புறேன்." எழுந்து கொண்டாள்.

                             (தொடரும்)

   
  

Sunday 22 July 2012

போகப் போகத் தெரியும் - 18



   திருவிழாவிலேயே பிரட்சனை வரும் என்று அவளுக்கு அப்பொழுது தெரியாது.
   பிரச்சனை என்று ஒன்றை நாம் அனுபவிக்கும் வரை நாம் நம்முடைய துணிவைத்தானே நம்பியிருக்க வேண்டும்.

   யாரோ தன் பின்னால் கணைக்கும் குரலைக் கேட்டு சட்டென்று திரும்பிப்பார்த்தாள் மீனா.
   சக்திவேல் நின்று கொண்டிருந்தான்.
   அவனைப் பார்த்ததும் கட்டிலில் குப்புற படுத்திருந்தவள் சட்டென்று எழுந்து நின்றாள். இரவு எட்டுமணியாகும் இந்த நேரத்தில் இவர் எங்கே இங்கே..? மனம் கேள்வி கேட்டது. ஆனால் அவனைக் கேட்க வாய் வரவில்லை.
   பேசாமல் நின்று அவனைப் பார்த்தாள். அவன் அவளை உச்சிமுதல் பாதம் வரையில் ரசித்துப் பார்த்துச் சிரித்தான்.
   அவள் அன்று வீட்டில் தானே இருக்கிறோம் என்ற எண்ணத்தில் பழைய பள்ளி சீருடையை அணிந்திருந்தாள். அது காப்பி நிறத்தில் குட்டை பாவாடை (ஸ்கேட்) சந்தன நிறத்தில் காலர் வைத்த சட்டை. சட்டை சற்று சிறிய அளவு! அவள் அங்கங்களை அளவெடுத்து தைத்தது போல் இருந்தது.
   அவன் அவளைப் பார்த்த பார்வை வினோதமாகப் பட்டதால் தன் அருகில் கிடந்த சுரிதாரின் துப்பட்டாவை எடுத்து மார்புக்குக் குறுக்காகப் போர்த்தினாள். அவன் இவள் செய்கையை உணர்ந்து கண்களை தாழ்த்திச் சிரித்துக் கொண்டான். இதற்குப் பிறகும் சும்மா நிற்பது சரியில்லை!
   'நீங்க எங்க இங்க இந்த நேரத்துல?"
   'ம்.. கீழ கதவ தட்டித்தட்டிப் பாத்தேன். யாருமே பதில் தரல. வீட்ட தொறந்து போட்டுட்டு எங்கதான் போயிருப்பீங்கன்னு நெனச்சி உள்ளவந்தேன். யாரையும் காணாம். அதான் மாடிக்கு வந்தேன். இங்க நீ என்னடான்னா.. சக்திவேலுன்னு எழுதன தாள ரசிச்சி பாத்துக்கினு.. கண்ணனைப் பாக்க ராத ஏங்குன பாட்டக்கேட்டுக்கினு மெய் மறந்து போய் இருக்கற!" என்றான்.
   தன்னை உன்னிப்பாகப் பார்த்திருக்கிறான். அவளுக்கு வெட்கத்தில் கன்னம் சிவந்தது.
   'சரி என்ன விசயம்?" மெதுவாகக் கேட்டாள்.
   'நல்லா வெளையாடிக்கினு இருக்கிற பொண்ணுங்க திடீர்னு ஒருநாள் பெரிய மனுஷியாயிட்டான்னு வெளிய வராதுங்க. அந்த மாதிரி நீயும் பெரியமனுஷி ஆயிட்டியோன்னு நெனச்சி.. பச்ச ஓலகட்டிட்டு போலாம்ன்னு தான் வந்தேன்." என்றான் குறும்பாக. அவனின் கேலி புரிந்தது.
  'அதல்லாம் அஞ்சி வருஷத்துக்கு முந்தியே ஆயாச்சி. என்னோட மாமா பசங்க மூனு பேரும் எனக்குப் போட்டி போட்டுக்கினு ஓல கட்டினாங்க."  என்றாள் பெருமையாக. ஆனால் அதே சமயம் சக்திவேலுவின் முகம் மாறுவதையும் கண்டு ரசித்தாள்.
   'சரிசரி. அன்னைக்கு எதுக்காக மயங்கி விழுந்த? அத மொதல்ல சொல்லு." என்றான் குரலில் சற்றுக் கடுகடுப்பாக.
   'அது.. யானையப் பாத்துத்தான்;;.. பயந்துட்டன்.."
   'யானைய பாத்து பயந்தா.. கன்னம் ரெண்டும் ஏன் கன்னிபோவணும்? உன்னோட ஜாக்கெட் கிழிஞ்சி அதுல இருந்த ஊக்கு ஏன் உன்னோட தோள்பட்டையைக் குத்திக் கிழிச்சி இருக்கணும்? சொல்லு அங்க என்ன ஆச்சி?"
   அவன் அங்கே நடந்ததைச் சரியாக யூகித்து இருக்கிறான். அவனின் கேள்வி வேந்தனை நினைவுப்படுத்தியது. அந்த நிகழ்ச்சி பழைய காயத்தைக் கீறிவிட்ட வேதனையை ஏற்படுத்தியதால் கண்கள் அவளையும் அறியாமல் கலங்கத் துவங்கின.
   சட்டென்று திரும்பி கண்ணீரை அடக்கமுயன்றாள். முடியவில்லை. அவளின் செய்கையை உணர்ந்த சக்திவேல் அவளின் தோளில் கை வைத்துத் தன்பக்கமாகத் திருப்பினான். குனிந்திருந்தவளின் முகவாய்கட்டையை நிமிர்த்தினான்.
   அவள் கண்களிலிருந்து இரண்டு சொட்டுக் கண்ணீர் ஆறாக கன்னத்தில் இறங்கியது.
   'சொல்லுமா.. உன்ன யார் என்ன செஞ்சாங்க? சொல்லு. பயப்படாம சொல்லு. ஒனக்கு நான் இருக்கறண்டா. சொல்லு."
   அவள் தோள்பட்டையை உலுக்கினான். அவன் அப்படி சொன்னதும் அவன் மார்பில் முகம் புதைத்து அழுதாள்.
   நமக்கு உதவியாக நம்மை நேசிப்பவர் அருகில் இருந்தால் சில நேரங்களில் கவலையை அதிகப்படுத்தி அதை வெளிக்காட்டவும் வைத்துவிடுகிறது!
   அவன் ஒன்றும் விளங்காமல் யோசனையுடன் நின்றிருந்தான்.
   சற்று நேரம்; தன்னை மறந்து அழுதவள் சட்டென்று அவனை விட்டு விலகி நின்று கண்களைத் துடைத்துக் கொண்டாள். அவன் அவள் செய்கையை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.
   'இதோ பாருங்க. நா அன்னைக்கி யானைய பாத்துத்தான் மயக்கடிச்சி விழுந்தேன். வேற ஒன்னும் காரணமில்ல." என்றாள்.
   அவன் அவளையே  பார்த்துக் கொண்டிருந்தான். அவளால் அவனுடைய கோபக்கனல் பொருந்திய கண்களை நேருக்கு நேர் சந்திக்க முடியாதவளாக தன் பார்வையை வேறு பக்கமாகத் திருப்பினாள்.
   'அப்போ.. என்ன காரணம்ன்னு எங்கிட்ட சொல்ல மாட்டயில்ல?"
   'வேற எதுவும் காரணம் இல்ல." என்றாள் திட்டவட்டமாக!
   'சரி. அத நானே கண்டுபுடிக்கிறேன்." என்று அழுத்தமாகச் சொன்னவன் சற்று நேரத்தில் குரலை மென்மையாக்கிக் கொண்டு  'மீனா.. நாளை காலையில ஒம்பதர மணிக்கி தேர் ஊர்வலம் பொறப்படும். நீ கண்டிப்பா அந்த ஊர்வலத்துல கலந்துக்கணும். என்ன..?" சற்றுக் கனிவாகச் சொன்னான்.
   'சரி" என்றாள் சற்றுத் தயக்கமாக.
   'இன்னும் என்ன? ஒனக்கு யானத்தான் பயம்ன்னா.. நாளைக்கி யானைங்கள ஊருக்கு வெளிய நிக்க வக்கிறேன் போதுமா..? ஆனா நீ ஊர்வலத்துல அவசியம் கலந்துக்கணும் புரியுதா..?"
   'சரி கலந்துகிறேன்." என்றாள். மனக்கண் முன் வேந்தன் வந்து நின்றான்.
   'சக்திவேல்.." முதன்முறையாக அவனைக் கூப்பிட்டாள்.
   'என்ன..?"
   'சக்திவேல். திருவிழா முடியிற வரைக்கும் நீங்க கொஞ்சம் பொறுமையா அமைதியா இருக்கணும். சரியா..?"
   'ஏன்..? என்ன விசயம்..?"
   'இல்ல. இப்போ திருவிழா நேரம்மின்னதால நெறைய வெளியூர் காரங்க வந்திருக்காங்க. அவங்க யாரும் நம்ம ஊர்காரங்க மாதிரி இருக்க மாட்டாங்க. ஏதாவது அப்படி இப்படின்னு தப்பு செஞ்சாலும் நீங்க நம்ம ஊர் நல்லதுக்காக பொறுத்து தான் போவணும். நமக்குத் திருவிழா நல்லபடியா முடியுணும். அதான் முக்கியம்."  என்றாள்.
   அவன் சற்று யோசித்துவிட்டுப் பிறகு 'சரி" என்று தலையாட்டி விட்டுக் கிளம்பினான்.
   மீனா அவன் போன வழியையே பார்த்துக் கொண்டிருந்தாள். மனம் அவனை மீண்டும் பார்க்கத் துண்டியது. அவள் மனத்தைப் புரிந்தவனாகச் சில விநாடிகளில் திரும்பிவந்தான். அவன் கையில் ஒரு பை! அவள் என்ன என்பது போல் பார்த்தாள்.
   'மீனா.. இனிமேல நீ வீட்டுலக்கூட இந்த மாதிரி சின்னபாப்பா டிரெஸெல்லாம் போடாத. இதுல நீ கேட்ட மாதிரி டிரெஸ் வாங்கியிருக்கேன். இந்தா. கட்டிக்கோ." நீட்டினான்.
   'நீங்க எதுக்கு எனக்கு டிரெஸ் வாங்கித்தரணும்..?"
   தன்மான உணர்வு தலைதூக்கக் கேட்டாள்.
   'ம்.. இன்னைக்கி நான் உன்ன பாத்தமாதிரி வேற யாரும் அப்படி பாத்துடக் கூடாதுன்னுத்தான். பொண்ணுங்க போடுற டிரெஸ் ஆம்பளைங்கள அலப்பாய விடக்கூடாது. நீ போட்டிருக்கிற டிரெஸ்;.. யப்பா.. இன்னைக்கி எனக்குத் தூக்கமே வராது போ.."
   சொல்லிவிட்டு அந்த பையை அங்கேயே வைத்துவிட்டுப் போய்விட்டான்.
   மீனா தான் உடுத்திருந்த விதம் குறித்துத் தன்னைத் தானே திட்டிக் கொண்டு.. வெட்கப்பட்டுக் கொண்டாள்.
                                                                                                                                               


  ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²
  
   மறுநாள் காலை மணி ஒன்பது. காலை வெயில் கசக்கசப்பாக இருந்தது. மீனா சக்திவேல் வாங்கித்தந்த சிகப்புநிற பட்டுப் பாவாடை அதேநிற தாவணியில் அன்று மலர்ந்த செந்தாமரையாக இருந்தாள். அளவான ஒப்பனை. தன் சுறுண்டகூந்தலை விரித்து முன் பக்கமாகத் தூக்கி க்ளிப் வைத்திருந்தாள். முடி இன்னும் சரியாக காயாததால் மாடியிலிருந்த படி தெருவை வேடிக்கை பார்த்து கொண்டு தன் கை விரலால் கோதி சூரிய ஒளியில் காயவைத்து கொண்டிருந்தாள்.
   தெரு முழுவதும் ஒரே தலைகள்! கொஞ்சம் கூடத் தரை தெரியவில்லை. அவ்வளவு கூட்டம். சுற்று வட்டாரக் கிராமமக்கள் மட்டுமல்லாமல் சக்திவேல் திருவிழாவிற்காக பத்திரிக்கையில் விளம்பரம் கொடுத்திருந்ததால் அன்று தேர்த் திருவிழாவிற்காக நகரப் புறங்களில் இருந்தும் மக்கள் அதிகமாக வந்திருந்தனர்.
   கூட்டம் நெறுக்கித் தள்ளியது. அதிலும் வீதிக்கு இருப்புறங்களிலும் கடைகள்! மக்கள் பேரம் பேசிப் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தார்கள்.
   இவ்வளவு நெரிச்சலான கூட்டத்தைத் தள்ளிக்கொண்டு யார் அது தலைத்தெரிக்க ஓடி வருவது..?
   மீனா கண்களைச் சுருக்கிக் கொண்டு பார்த்தாள். யார் என்று தெரியவில்லை. ஆனால் அவனைத் துரத்திக்கொண்டு சக்திவேல் கையில் அரிவாலுடன்!!!
   இவளுக்கு மனது பக்கென்றது. என்ன இது குழப்பம்? இன்னும் சில நிமிடங்களில் தேர் ஓடப் போகிறது.;..! இந்த நேரத்தில் இவர் ஏன் கையில் அரிவாலுடன் அவனைத் துரத்த வேண்டும்?
   இப்பொழுது மீனா.. மின்னல் வேகத்தில் அவர்களைப் பிடிக்க ஓடினாள்.
   ஓரிடத்தில் அந்த ஆள் தரையில் அமர்ந்து கொண்டு கைகளைக் கூப்பி சக்திவேலுவைப் பார்த்து கும்பிட்டு கொண்டிருக்க..
   'ஏண்டா.. ஒனக்கு என்ன திமுறு இருந்தா எங்க ஊரு பொண்ணுமேல கைய வச்சியிருப்ப..? வச்ச கைய.."
   அவன் கத்திக்கொண்டே அரிவாலை ஓங்க..  'சக்திவேல்.." என்று கத்திக்கொண்டே மீனா அவன் கையைப் பிடித்தாள். அவன் இவளைப் பார்த்து முறைத்தான். கோபம் கண்களில் தெரிந்தது.
   'வுடு மீனா.. இந்த நாய வெட்டினாத்தான் என்னோட ஆத்தரம் அடங்கும். என்னவுடு நீ.." அவளைத் தள்ளினான். ஆனால் மீனா அவனை விடுவதாக இல்லை.!
   'சக்திவேல்.. மொதல்ல அருவாவ கீழ போடங்க. நேத்தே சொன்னேனே! கொஞ்சம் பொறுமையா இருங்கன்னு. இன்னும் கொஞ்ச நேரத்துல தேர் கௌம்பணும். உங்க மொரட்டுத்தனத்தால திருவிழாவ நாசம் பண்ணிடாதீங்க. ப்ளீஸ். கத்திய கீழப்போடுங்க. நா சொல்லுறது நம்ம ஊரொட நன்மைக்குதான். கீழ போடுங்க."
   அதிகாரமாகவும் அதே சமயம் கொஞ்சம் கெஞ்சலாகவும் கேட்டாள்.
   அவன் சற்று கோபத்துடன் ஓங்கிக் கையைக் கீழே இறக்கினான். ஆனால் அதே சமயம் மீனாவும் கையை விடவும் அந்த அரிவாலின் கூரிய முனை அவளின் புறங்கையின் மேல் பக்கத்தில் இறங்கியது.
   இதையாரும் எதிர்பார்க்வில்லை. எதிர் பார்க்காமல் நடப்பது தானே விபத்து என்பது!
   சக்திவேல் அதிர்ச்சியாக மீனாவைப் பார்த்தான். கையிலிருந்து இரத்தம் ஒழுக ஆரம்பித்தது. அவள் அதை இலட்சியப் படுத்தவில்லை. லட்சியத்துடன் வாழ்பவர்களுக்கு நடுவி;ல் ஏற்படும் தடைகள் அனாவசியமானதே!
   அவள் கீழே விழுந்திருந்த அரிவாலை எடுத்தாள். தரையில் உட்கார்ந்து இருந்தவனைப் பார்த்துச் சொன்னாள்.
   'ஏய்.. ஓடிடு. திரும்பவும் அவர் இந்த ஊருக்குள்ள ஒன்ன பாத்தா ஓன் உசிறுக்கு நா கேரண்டி கொடுக்க முடியாது. ஓடிபோயிடு.." என்றாள் கண்களை அகலமாகத் திறந்து.
   அவன் பிழைத்தோம் சாமி என்றெண்ணியபடி எழுந்து ஓடினான்.
   சக்திவேல் மீனாவைப் பார்த்தபடி நின்றிருந்தான். அவள் தன் இடக்கையில் இருந்த காயத்தின் மீது தன் தாவணியின் முந்தானையால் அழுத்தி சுற்றி மூடினாள்.
   'சக்திவேல்.. நீங்க தேரடிக்கி போங்க." என்றாள்.
   'இல்ல மீனா.. நீ வா. டாக்டர் கிட்ட போவலாம்." அவன் அவள் கையைப் பிடித்தான். அவள் அவனை உதரினாள்.
   'இல்ல சக்திவேல். நீங்க ஒடனே தேரடிக்குப் போங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல தேர் கௌம்பிடும். நீங்க இப்ப அங்கத்தான் இருக்கணும். எனக்கு சின்ன காயம் தான். நானே டாக்டர்கிட்ட போயிடுறேன். நீங்க கௌம்புங்க!"
   அதற்குள் ஒலிப்பெருக்கியில் ;சக்திவேல் ஐயா எங்கிருந்தாலும் உடனே தேரடிக்கு வரவும். ; என்று மூன்று முறை தொடர்ந்து அறிவுpப்பு வந்தது.
   'மொதல்ல நீங்க அங்க போங்க.." அவள் அவனைப் பிடித்துத் தள்ளி விட்டு அரிவாலுடன் டாக்டர் வீட்டை நோக்கி நடந்தாள். அங்கே கூடியக் கூட்டம் கலைந்தது.


  ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²



   அவள் கண்விழித்தபோது கையில் பெரிய கட்டு போடப்பட்டிருந்தது. ஒரு கையில் குலுக்கோஸ் இறங்கிக்கொண்டிருந்தது. அவள் கட்டியிருந்த தாவணி ஜாக்கெட் கலைந்து ஓர் ஆணின் சட்டையைப் பாவாடைக்கு மேல் அணிந்திருந்தாள்.  டாக்டரின் மனைவிதான் அவளருகில் இருந்தாள்.
   'மீனா.. இப்ப எப்படிமா இருக்குது?"
   'ம்.. பரவாயில்ல. தேரு நல்லா ஊர்வலம் வந்துச்சா..?"
   'அதெல்லாம் நல்லவிதமா முடிஞ்சிதுமா. உன்னாலதான் அத பாக்கமுடியாம போயிடுச்சி. எனக்குத் தெரிஞ்சி இன்னைக்கி தேர் ஓடின காரணமே நீ தான்." என்றார்.
   'இருக்கலாம். என்ன செய்யிறது? வீடு கட்டுற கொத்தனார் அந்த வீட்டுலேயா வாழுறார்? துணிநெய்யிற நெசவாளி அவர் நெய்யிற துணியையா கட்டிக்கிறார்? வெத வெதச்சவன் அறுவட முழுசுமா சாப்பிடுறான்? அதே மாதிரித்தான் இதுவும். தனக்காக எதையும் செஞ்சிக்கினா அதுல தன்னலம் மட்டும் தான் இருக்கும். அடுத்தவனுக்காக வாழுறப்போ அதுல சொல்ல முடியாத அளவுக்கு நிம்மதி இருக்கும். அதை அனுபவிச்சாத்தான் தெரியும்." என்றாள் மீனா நிம்மதியாக.
   'நீ சொல்லுறதுலேயும் நியாயம் இருக்குது தான். ஆனா அந்த நிம்மதியப் பெற நம்மோட நிம்மதியையும் இழக்கவேண்டி இருக்குதே. உனக்கு மனநிம்மதி கெடைச்சிடுச்சி. ஆனா ஒடம்பு..? நீ மட்டும் சக்திவேலைத் தடுக்காம இருந்திருந்தா.. இன்னேரம் வெட்டு குத்துப் போலிசுன்னு அலைய வேண்டி இருந்திருக்கும். அதுவரைக்கும் நீ செஞ்சது எல்லாருக்குமே நல்லது தான்! ஆனா இந்த விசயம் யாருக்கும் தெரியாது. தெரிவிக்க வேண்டாம்ன்னு சக்திவேல் சொல்லிட்டு போனார்."
   'சக்திவேல் இங்க வந்தாரா..?"  ஆவலாகக் கேட்டாள்.
   'ம்.. அவர்தான் டாக்டர கூட்டிக்கினு வந்தார். நீ மயக்கமாயிட்ட. அவரோட சட்டய கழற்றி உனக்கு போடச்சொல்லி கொடுத்தார். தாவணியில ஒரே ரத்தக்கர! ஜாக்கெட்டையும் கட்டு போட்டிட்டா கழட்டமுடியாது இல்லையா..? அதனால தான்! நான் தான் சட்டைய போட்டுவிட்டேன்."
   டாக்டரின் மனைவி கனிவுடன் சொன்னார்.
   மீனா தான் அணிந்திருந்த சக்திவேலுவின் சட்டையைத் தொட்டு தடவிப் பார்த்துக் கொண்டாள். ஏதோ மனத்தில் அதிக தைரியம் வந்தது போல் இருந்தது.
   தனக்குப் பிடித்தவர் தன் அருகில் தான் இருக்கிறார் என்ற எண்ணமே சிலருக்குச் சில வகை மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
   கண்ணுக்குத் தெரியாத கடவுளை மனத்தில் கொண்டு வந்து நிறுத்தி தனக்கு வேண்டியதை கேட்டு கொள்வதில்லையா..? அதே நிலை தான் இதுவும்.
   அவளே அவளை நினைத்துச் சிரித்து கொண்டாள்.
   ஆனால் இந்தச் சிரிப்புச் சந்தோசம் இன்று முழுவதும் கூட நீடிக்காது என்பதை அவள் அப்பொழுது உணர்ந்திருக்கவில்லை.

                           (தொடரும்)


Tuesday 17 July 2012

போகப் போகத் தெரியும் - 17



        தொட்டவுடன் உதிர்ந்துவிடும் சிவந்த சின்ன சின்ன இதழ்கள்! இருந்தாலும் கூட்டாகச் சேர்ந்து கட்டி அணைத்து வெள்ளிக் கம்பிச் சிறைக்குள்ளே மூச்சுவிடவும் முடியாமல் அடைபட்டுக் கிடக்கும் ரோஜாப்ப+ கூட்டங்கள்..  மாலையாக இருப்பது ஒன்றும் பெரியதல்ல. யார் கழுத்தில் மாலையாகப் போகிறோமோ... என்று காத்து கொண்டிருப்பது போல் தோன்றியது மீனாவிற்கு!
   அவளும் தான் அங்கே மக்களோடு மக்களாக ஊர் பெரிய ஆலமரத்தின் அடியில் அமர்ந்து கொண்டு காத்திருந்தாள். அங்கே உள்ளூர்காரர்களைவிட திருவிழாவிற்காக வந்திருந்த வெளியூர்காரர்கள் தான் அதிகம். அதில் நிறைய பேர் சிறுசிறு வியாபாரிகள்!
   நிறையக் கடைகள் குடை ராட்டினம் பெரிய சுற்றுராட்டினம் என்று நிறைய பொழுது போக்குச் சாதனங்கள் இருந்தன. இதே வேறு நாளாக இருந்தால் மீனா அதில் விளையாடிக் கொண்டிருப்பாள். ஆனால் இன்று.?
   மாதத்தில் அந்த ஐந்து நாட்களில் இன்று முதல் நாள்! நிச்சயமாக அவள் எங்கேயும் போக முடியாது. அவ்வளவு வயிற்றுவலி இருக்கும். இன்றும் அதே நிலைத்தான்! ஆனால் ;சக்திவேல் ஜெயித்துவிட்டார். இதோ வந்து கொண்டிருக்கிறார்.... ; என்று ஒலிப் பெருக்கியில் தெருவுக்குத் தெரு சத்தமாகச் சொல்லிக் கொண்டே போனதைக் கேட்டதும் வலியைப் பொறுக்காமல் எழுந்து வந்துவிட்டாள்.
   ப+க்கடைக்காரரிடம் மாலைக்குப் பணம் கொடுத்துவிட்டு அவர் கடையின் ஓரத்திலேயே உட்கார்ந்து விட்டாள்.
   ஒரு சிறுமி அவளிடம் ஓடி வந்தாள்!
   'அக்கா... அக்கா... அந்த சர்பத் கடைக்கி பக்கத்துல இருக்கற கடையில ஒருத்தர் உன்னைக் கூட்டிகினு வரச் சொன்னார்." இவளின் கையைப்பிடித்து இழுத்தாள்.
   மீனா யோசனையுடன் அவள் சுட்டிக்காட்டின இடத்தைப் பார்த்தாள். அவள் இருக்கும் இடத்திற்கும் அந்த சிறுமி சொன்ன இடத்திற்கும் நடுவில் ஒரு யானை! அது தலையை நீட்டுபவர்களிடம் சில்லரையை வாங்கிக் கொண்டு ஆசிர்வாதம் செய்து கொண்டிருந்தது.
  அவளுக்கு யானை என்றாலே பயம்! அதிலும் இப்படியான நேரத்தில் பெண்கள் எந்த விலங்கையும் தொடக்கூடப் பயப்படுவார்கள்! அதிலும் யானை தெய்வீகத்தன்மை வாய்ந்தது. அதனைத் தாண்டிப் போவதா....? முடியாது.
   'பாப்பா.... அங்க யான இருக்குது. எனக்கு யானன்னா பயம். நான் வரலைன்னு போய்ச் சொல்லு. வேணும்மின்னா அவர இங்க வரச்சொல்லு." என்றாள்.
   சிறுமி போய்விட்டாள். ஆனால் சிறிது நேரத்திலேயே திரும்பி வந்தாள். 'அக்கா.... யானைய அனுப்பியாச்சாம். உன்ன ஒடனே வரச்சொன்னார்." என்றாள் அவள்.
   மீனா திரும்பி யானை இருந்த இடத்தை நோக்கினாள். யானை அங்கே இல்லை!! அவளுக்காக யானையையே அப்பறப்படுத்திவிட்டு கூப்பிடுபவர் யாராக இருக்கும்.....? யோசனையுடன் அங்கே சென்றாள்.
   சர்பத் கடைக்குப் பக்கத்தில் புதியதாகத் திருவிழாவிற்காகப் போடப்பட்ட கொட்டகை. அது தண்ணீரப்; பந்தலாக இருந்திருக்க வேண்டும். பெரிய பெரிய அண்டாக்களும் ப்ளாஸ்டிக் டம்ளர்களும் காலியாக இருந்தன. உள்ளே சென்றாள். அங்கே ஓலையால் செய்த ஒரு தடுப்பு!
   மெதுவாக அங்கே நுழைந்த பொழுது சட்டென்று ஒரு கை அவளைப்பிடித்து உள்ளுக்குள் இழுத்தது. அதிர்ச்சியுடன் இழுத்தவனின் மேல் விழுந்தவள் நிமிர்ந்து அவனைப் பார்த்ததும் நடுங்கிவிட்டாள்! வேந்தன்!!!
   அதிர்ச்சியில் அசையாது நின்றுவிட்டாள். அவன் இவளின் விரித்திருந்த கூந்தலைக் கொத்தாகப் பிடித்தான்.
   'ஏன்டி...... நா எவ்ளோ கஷ்டபட்டு ப்ளேன் பண்ணி அந்த ஆறுபேரையும் கவுக்கலாம்ன்னு நெனச்சி இருந்தேன்..... நீ ர். சியா.... போலிசுக்குப் போன் போட்டுசொல்லிட்டியா....? ஒனக்கு எவ்ளோ திமுரு இருக்கும்? அனாத நாயே....."
   ;பளார் ; என்று கன்னத்தில் அறைந்தான். அவளின் கண்கள் கலங்கிவிட்டன. பயம் நெஞ்சை அழுத்தியது. பேச்சு வரவில்லை.
   'ஏய்.... மொதோமொதோ உன்ன பாத்தேனே... அன்னைக்கே உன்ன ஒரு வழி பண்ணி இருக்கணும்.... அப்போ தெரிஞ்சிறுக்கும் இந்த வேந்தன் யார்ன்னு. அப்போ என்ன...? இப்போ காட்டுறன். நா யாருன்னு...."
   சொல்லிக்கொண்டே அவளின் மாராப்பைப் பிடித்து இழுத்தான். அவன் இழுத்த இழுப்பில் ஜாக்கெட்டுடன் சேர்த்துக் குத்தியிருந்த ;ஊக்கை ; யையும் பிய்த்துக் கொண்டு தாவணையின் முந்தானை அவன் கையில் வந்து விட்டது.
   மீனா மார்பைக் கைகளால் குறுக்காக மூடிக்கொண்டாள். ஊக்கு தோள்பட்டையில் அழுத்தமாகக் கீறிவிட்டதால் அவ்விடம்;;;;; எறிந்தது. ஜாக்கெட்டும் கிழிந்து தொங்கியது. அவன் வெறிபிடித்தவன் போல் அவளைக் கட்டியணைக்க வந்தான். மீனா ஒரே விநாடி யோசித்தாள். கோபம் தலைக்கேறியது.
   'டேய்.... நீயெல்லாம் ஆம்பளையா....? சீ;;;.... என்ன கற்பழிச்சிட்டா மட்டும் நீ அம்பள ஆயிடுவியா.... தூ.... " கோபமாகக் துப்பினாள்.
   அவன் இவளைப் பார்த்துப் பற்களைக் கடித்துகொண்டு 'என்னடி சொன்னே....." அவளின் இரண்டு கன்னங்களிலும் மாறிமாறி அறைந்தான். மீனா கல்லாக நின்றாள். அவனைப்பார்த்து முறைத்தாள்.
   'தாலிகட்டின தன்னோட பொண்டாட்டிய தொடுறவன் தான் உண்மையான ஆம்பளை! என்ன நீ இப்போ நாசம் பண்ணாலும் நீ எனக்குப் பேடித்தான்! உன்னோட பேடித்தனத்த தீட்டோட இருக்கறவ கிட்டக் காட்டி மேலும் அசிங்கப்படாதே...." அழுத்தமாக ஒருவிரலைக் காட்டிச் சொன்னாள்.
   'தாலி தானே கட்டணும்? கட்டிக்காட்டுறேன். எவ்ளோ எதிப்பு வந்தாலும் ஒனக்கு தாலி கட்டி நா ஆம்பளன்னு நிறுபிக்கிறேன். ஏய் மீனா..... உன்ன நா விடமாட்டேன்டீ....."
   கோபமாகக் கத்தினான். அதற்குள் எல்லாவத்தியங்களும் முழங்க ஆரம்பித்தது. அனேகமாக சக்திவேல் அங்கே வந்துவிட்டிருப்பான்! அதனால் தான் கரகாட்டம் ஒயிலாட்டம் மயிலாட்டம் என்று அனைத்து ஆட்டங்களின் வாத்திய சத்தங்களும் ஒன்றாக ஒலித்தது.
   'வக்கிறேன்டி ஒனக்கு வேட்டு....." கோபமாகச் சொல்லிக் கொண்டே அவளைப் பிடித்து தள்ளிவிட்டு அந்த இடத்தைவிட்டு வெளியேறினான் அவன்.
   அவளுக்கு இப்பொழுதுத்தான் போன மூச்சுத் திரும்பிவந்தது போல் இருந்தது. அதுவும் நிரந்தரமில்லை என்று நினைக்கத் தோன்றியது. கண்களைத் துடைத்துக் கொண்டு தலைமுடியையும் உடையையும் சரிசெய்து கொண்டு ப+க்கடையின் அருகில் வந்து உட்கார்ந்து விட்டாள்.
   அங்கிருந்த கூட்டம் குறைந்திருந்தது. அனேகமாகச் சக்திவேலுவை பார்க்கப் போய் இருப்பார்கள்.
   ஆனால் அவள் போகவில்லை. அதற்கு அவளது மனமும் உடலும் சம்மதிக்கவில்லை. இருந்தாலும் சக்திவேலுவைப் பார்க்க மனம் ஆவல் கொண்டது.
   வாத்திய ஓசை மிக அருகில் கேக்கவும் மாலையைக் கையில் வாங்கிக் கொண்டு அவன் வரும் வழிய நோக்கி நடந்தாள்.
   நெருக்கமாக இருந்த கூட்டத்தை விலக்கிக் கொண்டு அவளால் செல்ல இயலவில்லை. எல்லோரும் வெளியூர்காரர்கள் வேறு! பேசாமல் ஓர் இடத்தில் நின்றுவிட்டாள்.
   சக்திவேல் கழுத்துநிறைந்த மாலைகளுடன் வண்டியை விட்டிறங்கி நடந்து வந்தான். அவன் வரும்; வழியெல்லாம் மாலைகள் போடப்பட்டன. அவன் கண்களோ மீனாiவுத் தேடின!!
   யாரோ ஒருவர் மீனா இருக்கும் இடத்தைச் சுட்டிக்காட்ட அவன் தன் தோழர்களுடன் அவளருகில் வந்தான்!
   மீனா அதிர்ச்சியாக அவனைப்; பார்த்தாள். அவளுக்குக் கோபம் தலைக்கேறியது. ஏற்கனவே வேந்தனிடம் பட்ட அவமானம்! இப்பொழுது இவன் வேறு வெற்றியுடன் வந்திருக்கிறான்!
   தான் போட்டியில் கலந்து கொள்ளக்கூடாது என்று சொல்லியும் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றிருக்கிறான்.....!
   அப்போ சக்திவேல் எங்க....? சக்திவேல் தானே போட்டியில ஜெயிச்சதா அறிவிச்சாங்க.....? இவனுக்கு ஏன் மாலை மரியாதை எல்லாம்....?
   அவர் எங்கே.....? இவனை விடுத்து அவள் கண்கள் மற்ற இடங்களைத் தேடியது.
   'யாரத்தேடுற மீனா....?" சேகர் கேட்டான்.
   'சக்திவேலத்தான்." அவள் மெதுவாக சொல்ல...
   'என்ன மீனா? இன்னுமா ஒனக்கு தெரியல... இவருத்தான் சக்திவேல்."
   சேகர் சிரிப்புமாறாமல் சொல்ல மீனா அதிர்ச்சியுடன் சின்னதம்பியை நோக்கினாள். அவன் சிரித்துக் கொண்டே இவளைப் பார்த்துக் கண்ணடித்தான்.
   'மீனா... மாலைய போடு. சக்திவேலுவும் இவர் தான். உன்னோட சின்னதம்பியும் இவர்தான். ம்... மாலையபோடு....."
   கூட்டத்தில் யாரோ ஒருவர் குரல் கொடுக்க மீனா குழப்பத்துடனே மாலையை இருகைகளாலும் தூக்கினாள்
   அவன்மட்டும் தலையைச் சற்றுக் குனிந்து காட்டியிருந்தால் நிச்சயம் அவன் கழுத்திலேயே மாலையைப் போட்டிருப்பாள்.
   ஆனால்....
   அவன் அந்த மாலையை சிரித்து கொண்டே கழுத்தில் விழாதவாறு கையால் வாங்கிக் கொண்டான்!
   அவளுக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சி! அப்படியானால் தான் மாலைப் போடுவதை விரும்பவில்லையா....?
   சந்தேகத்துடன் முறைத்தவளை யாரோ தோள்பட்டையில் தன்னை தீண்டி அழைக்கவும் யார் என்று பார்க்கத் திரும்பினாள்.
   தன்னைத் தீண்டியது ஒரு பெரிய யானையின் துதிக்கை தான் என்பதை உணர்ந்ததும் யானையைத் தன் மிக அருகில் கண்டதும்..... தன்னை மறந்து வாயில் கைவைத்து ;வீர் ;என்று கத்தியபடி மயங்கி சரிந்து விழுந்தாள்!
'யமுனையாற்றிலே ஈரக்காற்றிலே கண்ணனோடு தான் ஆட....." என்று திருவிழா ஒலிப்பெருக்கியில் மிதந்து வந்த பாடலை ரசித்தபடி மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தாள் மீனா.
   அன்று யானையைப் பார்த்து மயங்கி விழுந்த பிறகு கண்விழித்த போது தன் வீட்டில் படுத்திருந்தாள். 'சக்திவேல் தம்பிதான் உன்னைத் தூக்கிணு வந்து கெடத்தினார்" என்று அறிவழகி சொன்னபோது முகமும் மனமும் வெட்கத்தால் சிவந்தது.
   ஆனாலும் அவன் மாலையைக் கையில் வாங்கிக் கொண்டது அவளுக்குத் தான் எதையோ இழந்து விட்டோமோ என்று எண்ணத் தோன்றியது. அது எதுவென்று தான் தெரியவில்லை.
   தான் முதன்முதலில் அவனைச் சந்தித்தது முதல் இன்று வரையிலும் நடந்த அனைத்தையுமே ஒன்றன் பின் ஒன்றாக நினைத்துப் பார்த்தாள். எல்லாவற்றிலுமே தான் சக்திவேல் விசயத்தில் ஏமார்ந்து இருந்ததை நினைத்து வெட்கப்பட்டாள்.
   அவள் ஏமார்ந்தது ஒரு குற்றமில்லை! தன்னை அனைவருமே ஆதாவது சக்திவேல் ஆறு நண்பர்கள் கணேசன் கமலா ருக்மணி என்று எல்லோருமே தன்னிடம் நன்றாகப் பழகியும் சின்னதம்பி தான் சக்திவேல் என்று சொல்லவே இல்லையே!!!
   அவர்கள் பெரியவர்கள்!! ஆனால் இந்த ஊர் சின்னப் பிள்ளைகள்....? அவர்கள்கூட அவளிடம் உண்மையைச் சொல்லவில்லையே.....!!
   சரி இவர்கள் அனைவருமே இந்த ஊர்காரர்கள்! ஆனால் அந்த வெற்றிவேல்....? அவன் இவர்களுக்கு விரோதித் தானே.....! அவனாவது அன்று சொல்லியிருக்கலாமே.... அவன் கூடச் சொல்லவில்லையே.....
   முதன்முதலில் இந்தப் பிரட்சனை யாரால் வந்தது? சரியாக யோசித்துப் பார்த்தால்... அது அந்த தத்துவஞானி கணேசன் தான். அவன் சக்திவேலுவை ஒர் உருவகப்படத்திச் சொல்லியிருக்கவில்லை என்றால்.....இவள் எப்பொழுதோ உண்மையை உணர்ந்திருப்பாள்! எல்லாவற்றிர்க்;கும் காரணம் அந்தக் கணேசன் தான்!
   சரி. அவன்தான் அப்படிச் சொன்னான் என்றாலும் நம்புத்தி எங்கே போனது...? ஆழ்ந்து சிந்தித்திருக்க வேண்டாம்.....? இப்பொழுது இப்படி ஏமார்ந்து இருக்கிறோமே....!
   தானே தன் தலையில் தட்டிக்கொண்டாள். அப்படிச் செய்தவளை ஆச்சரியமாகப் பார்த்த அறிவழகியிடம் 'ஏம்மா.... நீயாவது சொல்லியிருக்கக் கூடாது.... சின்னதம்பி தான் சக்திவேல்ன்னுட்டு....." கோபமாக கேட்டாள்.
   'என்னது சின்னதம்பியா...? யாரு அது.....?" அவள் மகளையே திருப்பி கேள்விக்கேட்டாள்.
   அவளுக்கு எல்லாம் நன்றாகப் புரிந்து விட்டது. எல்லோருமே சேர்ந்து தான் தன்னை முட்டாளாக்கி இருக்கிறார்கள் என்று!
இனி என்ன செய்ய முடியும்? பேசாமல் தன் ஏமாற்றத்தை ஒப்புக் கொள்ள வேண்டியது தான்! தானே இதை ஒப்புக் கொண்டால் அவமானத்திலிருந்து தப்பிக்கலாம்! வேறவழி?
   இதோ இரண்டு நாட்களாக வெளியே போகவில்லை. அதற்கு மூன்று காரணங்கள்!
   ஒன்று வெளியே போனால் நிச்சயமாக சின்னதம்பி இல்லையில்லை. இனி அவனை இப்படிச் சொல்லி அழைக்கக்கூடாது. சக்திவேல்! இனி இப்படிதான் நடைமுறைக்குக் கொண்டு வரவேண்டும்.
     வெளியே போனால் நிச்சயம் சக்திவேலுவைப் பார்க்கவேண்டி வரும். அவன் நிச்சயம் தன்னைக் கேலி செய்வான். தான் கேட்ட பரிசைத் தரச் சொல்லிக் கேட்பான்.  இப்படி நினைக்க அவள் கன்னங்கள் சிவந்தன!
   அடுத்தது. அந்த மனித மிருகம் அந்த வேந்தன்! எப்படியாவது அவளுக்குத் தாலி கட்டுகிறேன் என்று சவால்விட்டு இருக்கிறான். அவனை நினைக்க.. அவள் கண்கள் கோபத்தால் சிவந்தன.
   மற்றது! அந்த யானை! அதன் பயம் இன்னும் அவள் நெஞ்சத்தை விட்டு நீங்கவில்லை!
   பிறகு எப்படி போவாள்..? அறிவழகியும் வெளியே போய் வா.. என்று மகளைச் சொல்லியும் இவள் உடம்பு சரியில்லை. கண் எறிகிறது. வயிற்று வலி. என்று ஏதாவது ஒரு காரணம் சொல்லிக் கொண்டு வீட்டிலேயே இருந்தாள்.
   நாளை காலையில் தேர் ஊர்வலம்! கிட்டதட்ட நூறு ஆண்டுகளுக்கு மேல் ஓடாமல் இருந்தத் தேர்! நாளை ஊர்வலமாக வரப்போகிறது. அதைக் கூடப் பார்க்கவேண்டும் என்று மீனா எண்ணவில்லை.
   அவள் நினைத்திருந்தால் வேந்தனைப் பற்றி சக்திவேலிவிடம் சொல்லியிருக்கலாம்! ஆனால் ஊரில் திருவிழா நேரம்! இப்பொழுது இதைச் சொல்லப்போய் வேறு ஏதாவது பிரச்சனை வந்துவிட்டால்..?
   வேண்டாம். வேந்தனும் சாதாரண ஆள் இல்லை. அன்று மருத்துவமனைக்கு அடியாட்களுடன் வந்த விதமே தெரிந்தது. அவனைச் சுற்றியும் நிறைய பேர்கள் இருக்கிறார்கள் என்று!
   அதிலும் அவ்வளவு பெரிய மாட்டுவண்டி போட்டியில் மாடுகளுக்கு ஊசி மருந்து போடுவது என்றால் சாதாரண விசயமா..? அன்று அவள் யானைக்குப் பயப்படுகிறாள் என்றதும் சற்று நேரத்திற்குள் யானையை அனுப்பிவிட்டானே..! அவன் சொல்லுக்கும் இங்கே மதிப்புக் கட்டுப்பாடு இருக்கிறதே..!
   அவன் அவளிடம் நடந்து கொண்ட முறையைச் சொன்னால் நிச்சயம் ஏதாவது பிரச்சனை வரும். இப்பொழுது வேண்டாம். திருவிழா முடியட்டும். பிறகு அவனால் ஏதாவது பிரட்சனை வந்தால் சொல்லிக் கொள்ளலாம் என்று முடிவெடுத்திருந்தாள்.
   ஆனால் திருவிழாவிலேயே பிரட்சனை வரும் என்று அவளுக்கு அப்பொழுது தெரியாது.
   பிரச்சனை என்று ஒன்றை நாம் அனுபவிக்கும் வரை நாம் நம்முடைய துணிவைத்தானே நம்பியிருக்க வேண்டும்.


                             (தொடரும்)

Monday 9 July 2012

போகப் போகத் தெரியும் - 16



   தன்னை நாசம் செய்ய வந்தவனைச்  ;சக்திவேல் ; என்ற பெயர் மட்டுமே அதிர்ச்சியடைய வைத்தது. அதனால் மீனாவிற்கு அந்தப் பெயரின் மீது ஒரு மரியாதை!
   மரியாதையா.....? அல்லது மற்ற ஆண்களிடம் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அவளே அவளைச் சுற்றிப் போட்டுக் கொண்ட வேலியா......?
   சக்திவேல் என்ற பெயரின் மீது மரியாதை மட்டுமா....? அன்பும் அல்லவா ஒட்டியிருந்தது. ஒருவரைப் பிடித்துவிட்டால் அவர் மீது அன்பும் மரியாதையும் கலந்தே ஏற்படும். இதில் ஒன்றைத் தவிர்த்து ஒன்றைமட்டும் வைக்கமுடியுமா.....?
   அப்படியானால் அந்த அன்பு தான் காதலா....?
   இருக்கலாம்! இல்லாமலும் இருக்கலாம்!
   ஆனால் காதலுக்கென்று எந்த ஒரு வரைமுறையும் கிடையாதே! இளம் வயதில் யாருக்கு யார்மீது வருவது காதல்? எப்படி வருகிறது? எதனால் வருகிறது? ஏன் வருகிறது? இதை யாரால் பிரித்து வகுத்துச் சொல்லிவிட முடியும்?
   அப்படி வகுத்துப் பிரித்துச் சொல்லிவிட்டால்.... அது காதலாக இருக்க முடியாது அல்லவா.....?
   ஏதோ ஒரு மன ஈர்ப்பு தான் அது!
   அந்த மன ஈர்ப்பு அன்பு பண்பு பாசம் அழகு அறிவு வீரம் என்று இப்படி எதில் வேண்டுமானாலும் வருவது தானே.......! ஆனால் இது நிச்சயம் காதலாகாது!
   இதோ மீனாவிற்குச் சக்திவேல் என்ற பெயரின் மீதிருந்தது ஒருவித ஈர்ப்பு தான்! அந்த ஈர்ப்புத் தன்மையைத் தான் அவள் காதல் என்று நினைத்திருந்தாள்.
   அப்படியானால் சின்னதம்பி தான் அவள் காதலிப்பவனா.......? ஆனால் இதைப் புரிந்து கொள்ள அவள் தன் மனத்துடனே சற்றுப் போராட வேண்டியிருந்தது.
   எப்பொழுதுமே தன் மனதுக்கு அமைதி உண்மை கிடைக்க வேண்டும் என்றால் அந்த மனத்துடனே போராட்டம் நடத்தியாகத் தான் வேண்டும்.
   இப்பொழுது மீனா தன் மனத்துடனே போராடித் தெளிந்திருந்தாள். இருந்தாலும் அவளுக்குச் சின்னதம்பி தான் சக்திவேல் என்று தெரியாது!
   கடவுளைச் கற்சிலையாகவே நினைத்து வணங்குகிறவனின் முன் உண்மையான கடவுளே தோன்றினாலும் நம்ப மாட்டான். அது அவனது நம்பிக்கை!
   அப்படித்தான் மீனாவின் எண்ணத்திலும் சக்திவேல் என்ற பெயர் மட்டுமே உயர்ந்த உன்னதமான சக்தியாக இருந்தது!


  ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²


   சின்னதம்பியைப் போட்டியின் ஆபத்திலிருந்து காப்பாற்ற மனம் துடித்தது. தன் கைபோனை எடுத்துச் சின்னதம்பியின் எண்களை அழுத்தினாள்.
   காத்திருந்த சக்திவேல் போனை எடுத்துப் பார்த்தான். மீனாவின் பெயர்! முகம் முழுவதும் சந்தோஷம் பரவியது.
   தன் நண்பர்களைப் பார்த்துச் சொன்னான்.
   'பாத்திங்களா.....? அம்மணி தான் போனுல! யாரும் பேசாதிங்க...." சொல்லிவிட்டுப் பட்டனை அழுத்தி காது கொடுத்தான்.
   'அலோ...."
   'நான் மீனா பேசுறேன்."
   'ம்.... சொல்லு. என்ன விசயம்?" குரலை மாற்றியிருந்தான்.
   'நாளைக்கி நீங்க மாட்டுவண்டி போட்டியில கலந்துக்க கூடாது."
   'ஏன்....?"
   'காரணம் சொல்ல முடியாது."
   'நீ சொல்லலைன்னாலும் எனக்குக் காரணம் தெரியும்."
   'எப்டி.....?"
   'சக்திவேலுவுக்கு ஆயிரம் கண்கள்ன்னா எனக்கு ஆயிரம் காதுகள்!"
   'தோ பாருங்க. நீங்க சக்திவேலுவுக்குச் சமமான ஆளு தான்! ஆனா நீங்க அவரோட போட்டி போடக் கூடாது."
   'அதான். ஏன்.....?"
   'ஒரே உரையில ரெண்டு கத்தி இருந்தா அது ஒன்னை ஒன்னு வெட்டிக்கொல்லும்ன்னு உங்களுக்குத் தெரியாதா....?"
   'ஏன்.... வெட்டிக்கொல்லும்ன்னு நெனைக்கிற..? ஒன்றை ஒன்று உராய்ந்து தீட்டி இன்னும் கூர்மையாகும்ன்னு ஏன் சொல்லக் கூடாது....?"
   'அப்பா. உங்ககிட்ட என்னால பேசி ஜெயிக்க முடியாது. இதோ பாருங்க.. சக்திவேல் இந்த ஊருக்கே நெழல் தர்ர பெரிய மரம். அதன் நிழல்ல இருந்துக்கினு அதோட கெளைகள வெட்ட நெனைக்ககூடாது."
   'மீனா.... சக்திவேல் இந்த ஊருக்கே நிழல் தரும் மரம் தான். நான் இல்லைன்னலை. ஆனா ஒரு பெரிய மரத்து நெழலுல எந்த ஒரு செடியும் பசுமையா வளர முடியாது. என்னால ஒரு புல்லு ப+ண்டு மாதிரி வாழ முடியாது. எனக்குன்னு சுயமறியாதை இருக்குது. அதுமட்டுமில்ல சக்திவேல் தான் எல்லாத்திலேயும் உயர்ந்தவர்ன்னு நீ நெனைக்கிற......! அதனால தான் என்ன ஒனக்குப் புடிக்கல. இது எனக்கு அவமானமா இருக்குது. அவரோட பேர் மேல நீ வச்சிருக்கிற மரியாதை உன்னோட எதிரிலேயே இருக்கிற என் மேல வைக்கமாட்டுறே..... அதனால நாளைக்கி நடக்கிற போட்டியில நான் கலந்து போட்டியில அவர தோக்கடிச்சி வெற்றியோட வருவேன். இது நிச்சயம்."
   அழுத்தமாகச் சொல்லி முடித்தான். அவள் என்ன பேசுவதென்று தெரியாமல் பேசாமல் இருந்தாள். அவனே திரும்பவும் தொடர்ந்தான்.
   'மீனா...."
   'ம்....."
   'நாளைக்கி நான் போட்டியில ஜெயிச்சா நீ எனக்கு பரிசு தர காத்திருக்கணும். அந்தப் பரிசு சக்திவேலுவுக்கு நீ தர்ரதா சொன்ன ப+ மாலையோ.... இல்ல..... வெற்றிவேலுவுக்கு நீ தந்த ஒத்தை ரோஜாவோவா இருக்கக் கூடாது. என்னோட வெற்றிக்கு நீ எனக்கொரு முத்தம் தரணும். அதுதான் எனக்குக் கெடைக்கப் போற மிகப் பெரிய பரிசு. வெற்றி."
   அழுத்தமாகச் சொல்லிவிட்டுப் போனின் இணைப்பைத் துண்டித்தான். இல்லையில்லை. இனித் தொடர்பு கொள்ளமுடியாதவாறு இணைப்பு முழுவதையும் நிறுத்திவைத்தான்.
   நண்பர்கள் அனைவரும் அவனை வைத்தகண் வாங்காமல் புன்னகையுடன் பார்த்தார்கள்! சக்திவேல் குறும்பாகச் சிரித்துக் கொண்டான்.


  ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²


   மீனா அன்று முழுவதும் தூங்கவேயில்லை. சக்திவேலுவையும் சின்னதம்பியையும் நினைத்து மனப் போராட்டத்தின் உச்சிக்கே போய் இருந்தாள். பலமுறை சின்னதம்பியுடன் பேசுவதற்காகத் தொலைபேசியில் முயன்றும் பலனில்லை. இணைப்பு துண்டிக்கப் பட்டிருந்தது ஏமாற்றமாக இருந்தது.
   போட்டி துவங்க இன்னும் சில நிமிடங்களே இருந்தன. ஊரில் இருந்த முக்கால்வாசி ஆண்கள் சக்திவேலுவுடன் போட்டி நடக்கும் இடத்திற்குச் சென்றுவிட்டு இருந்தார்கள். மீனா யோசித்துவிட்டு ஒரு முடிவுக்கு வந்தவளாகச் சக்திவேலுவின் கைபோனுக்கு எண்களை அழுத்தினாள்.
   சக்திவேல் மீனாவின் பெயரைப் பார்த்ததும் சந்தோசத்துடன் எழுந்து அந்த இடத்தைவிட்டு நகர்ந்து பேச ஆரம்பித்தான். ஆனால் அவ்விடத்தின் அருகிலேயே வெற்றிவேலுவும் அவனுடைய தம்பிகளும் இருந்ததைக் கவனிக்கவில்லை. காதல் அவன் கண்களை மறைத்துவிட்டிருந்தது.
   'என்ன மீனா.... என்ன விசயம்?"
   'நா உங்க தம்பிகிட்ட கொஞ்சம் பேசணும்."
   'தம்பியா....? எந்தத் தம்பி......?"
   அவள் பதில் சொல்லவில்லை. அவள் இதுவரை சின்னதம்பியைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டது கிடையாது. அதனால் பேசாமல் இருந்தாள். அவன் புரிந்து கொண்டான்.
   'மீனா... சின்னதம்பிய சொல்லுறீயா....? ஆமா... அவன்கிட்ட என்ன சொன்னே....? ரொம்ப சுறுசுறுப்பா இருக்கான்......! போற போக்குல அவன் என்ன ஜெயிச்சிடுவான் போல இருக்குது." என்றான்.
   'போனை முதல்ல அவர்கிட்ட கொடுங்க நான் பேசணும்."
   'ம்.... தர்றேன்....."
   சற்று நேரம் பொறுத்து 'மீனா.... நீதான் போலிசுக்கு தகவல் சொன்னியா....? மாடுங்களுக்கு மயக்கஊசி போடப் போறதைப் பத்தி..... எதுக்கப்படி செஞ்சே.....? இப்போ பாரு இங்க ஒரே போலிசு கெடுபிடியா ஆயிடுச்சி. நீ சும்மா இருக்க மாட்டியா....?" என்றான் அவனே சற்றுக் கடுமையான குரலில்.
   அங்கே இருந்த வெற்றிவேல் இலேசாகச் சிரித்துக் கொண்டான். ஆனால் அவனருகில் இருந்த வேந்தன்...... அதிர்ச்சியாகச் சக்திவேலுவை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கண்கள் சிவந்தன. இதையெதையும் சக்திவேல் கவனிக்கவில்லை!
   'நீங்க மட்டும் நல்லா இருந்தா போதுமா...? மத்தவங்களையும் காப்பாத்த வேணாமா...? அதனால தான் நான் காலையிலேயே போலிசுக்குப் போன் பண்ணிச் சொல்லிட்டேன்." என்றாள்.
   'இது உன்னோட வேலையாத்தான் இருக்கும்ன்னு எனக்குத் தெரியும். சரிசரி இப்போ எதுக்குப் போன் செஞ்சே.....?"
   'நீங்க இந்தப் போட்டியில கலந்துக்க கூடாதுன்னு சொல்லத்தான்."
   'அது முடியாது. இந்தப் போட்டியில நா ஜெயிச்சி நீ தரப்போற பரிசை நான் வாங்கியே ஆகணும். இது என்னோட லட்சியம்."
   'நீங்க இந்தப் போட்டியில கலந்துக்கலன்னாலும் நீங்க கேட்ட பரிசை நான் தர்றேன். போதுமா....?"
   'என்ன சொல்லுற நீ........!!!"
   'ஆமாம் உண்மையைத்தான் சொல்லுறேன்! எனக்கு உங்களத்தான் புடிச்சிறுக்கு. ஆனா உங்களச் சக்திவேலுவுக்கு எதிரியா என்னால நெனச்சிகூடப் பாக்கமுடியாது. நீங்க எப்போதும் போல அவருக்குப் பிரண்டாவும் நெழலாவும் இருக்கணும். இது என்னோட ஆச. நீங்க இந்தப் போட்டியில கலந்துக்கினா நீங்கத்தான் நிச்சயம் ஜெயிப்பிங்க. எனக்குத் தெரியும். ஆனா சக்திவேல் தான் ஜெயிக்கணும். அதே சமயம் நீங்களும் தோக்கக்கூடாது. அதனால நீங்க போட்டியில கலந்துக்ககூடாது." என்றாள்.
   சக்திவேல் சற்று நேரம் பேசாமல் இருந்தான்.
   'சரி. இந்தப் போட்டியில சக்திவேல் தானே ஜெயிக்கணும்..? சரி நீ சொன்னது போலவே சக்திவேல் ஜெயிப்பார். போதுமா....? மாலையோட காத்திரு. ஆனா என்னோட பரிசை எனக்கு நிச்சயமா கொடுத்திடணும்... என்ன.....?"
   இங்கே இவள் கன்னம் சிவக்க 'சரி" என்றாள்.
   அங்கே சக்திவேல் போனை அழுத்தி ஒரு முத்தமிட்டுவிட்டு இணைப்பைத் துண்டித்தான். அவனின் செய்கையை வெற்றிவேல் சந்தோசத்துடன் பார்த்து ரசித்துச் சிரித்துக் கொண்டான். ஆனால் வேந்தனோ..... கண்கள் சிகப்பேற அவ்விடத்தைவிட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்தான்.


                             (தொடரும்)

Wednesday 4 July 2012

போகப் போகத் தெரியும் - 15


 மணி எட்டடிக்கச் சில நிமிடங்கள்!
   மீனா கோபத்துடன் அந்தக் கூடத்தைக் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தாள். மனம் ஒரு நிலையில் இல்லை. வரப் போகும் ஆபத்தை முதலில் சக்திவேலிடம் சொல்லிவிட வேண்டும். இன்னும் அவரைக் காணோமே.....!
   மேலும் பத்து நிமிடங்கள் கரைய சேகர் வந்து சொன்னான்.
   'மீனா அண்ணனைப் பாக்கணும்ன்னு சொன்னியாமே..... உன்னை கூப்பிடுறார்." என்றான்.
   எங்க?" அவலாகக் கேட்டாள்.
   'பொது விசயம்ன்னா ஆபிஸ் ரூமுலத்தான் பேசுவார். வா...."
   அவனுடன் சென்றாள். ஏற்கனவே பார்த்த அறைதான் அது!
   அன்று போலவே இன்றும் சக்திவேல் இவளுக்கு முதுகைக் காட்டியபடி! 'உட்காரும்மா" என்றார். அவள் உட்கார்ந்தாள்.
   இரண்டு முறை பேசியிருக்கிறோம்! இப்பொழுதாவது தன்னிடம் முகத்திற்கு நேராகப் பேசலாம் இல்லையா....? கேட்ட மனத்தைப் பெருமூச்சுடன் அடக்கினாள்.
   'சொல்லு மீனா என்ன விசயம்.....?"
   அவர் கேட்கும் பொழுதே சசிதரன் ஒரு இரும்பு அச்சாணியைக் கொண்டு வந்து மேசையின் மீது வைத்துவிட்டு 'அண்ணே அச்சாணி செஞ்சி வந்திடுச்சி." என்றான்.
   மீனா அந்த அச்சாணியைக் கையில் எடுத்து பார்த்து இலேசாகச் சிரித்தாள். அதில் ஏளனம் இருந்தது.
   'ஏன் மீனா சிரிக்கிற?" சசிதரன் தான் கேட்டான்.
   'உலகம் எவ்வளவோ முன்னேறிடுச்சி. ஒருத்தன ஒருத்தன் வீழ்த்தரத்துக்கு எவ்வளவோ நவீன மாடல் யுத்திங்க வந்துடுச்சி. ஆனா நீங்க இன்னும் பழய மாடல் எதிர்ப்பையே நெனச்சிக்கினு இருக்கீங்க. அதான் சிரிப்பு வந்துச்சி." என்றாள் சிரிப்பு மாறமல்!
   சசிதரன் அவளை யோசனையுடன் பார்த்தான். அவர்கள் அனைவரும் சற்று நேரத்திற்கு முன்புதான் இது குறித்துப் பேசிவிட்டு ஒரு முடிவுக்கும் வராமல் அங்கிருந்து வந்திருந்தார்கள். இந்த விசயம் இவளுக்கு எப்படித் தெரியும்.....?
   அவன் இவளைக் கேள்விக்குறியுடன் நோக்க.. மீனா சக்திவேல் இருந்த இடத்திற்குப் பார்வையைத் திருப்பினாள்.
   'சக்திவேல் நாளைக்கு நடக்க போற மாட்டுவண்டி போட்டியில கலந்துக்க போறிங்களா.....?" கேட்டாள்.
   'ஆமாம்"
   'நீங்க கலந்துக்க வேணாம்."
   'ஏன்....?"
   'அதுல கலந்துக்கினா தோல்வி மட்டும் கெடைக்காது. உங்க உயிருக்கும் ஆபத்து இருக்குது."
   'என்ன சொல்லுற நீ? கொஞ்சம் புரியும்படியா சொல்லு." இப் பொழுது குரலில் சற்று அதிகாரம் கலந்திருந்தது.
   'சொல்றேன். மூனு நாளு முன்னாடி என்னோட பிரண்டோட நாயிக்காக வெட்னரி ஆஸ்பிட்டலுக்குப் போயிருந்தேன். டாக்டருக்காக காத்துகினு இருந்தப்போ... என்பக்கத்துல இருந்த ஜன்னல் வழியா ஒரு ஆம்பளையோட கொரல். அந்தாளு கிசுகிசுப்பா ;ஏய் சரியா சொல்லு. இந்த மருந்து தானே.... ;ன்னு ஒருத்தன் கேக்க இன்னோருத்தர் நடுங்குற கொரல்ல ;ஆமாங்க இது தான். இந்த மருந்த நாதான் கொடுத்தன்னு யார்கிட்டேயும் சொல்லிடாதிங்க. என்னோட வேல போயிடும் அப்படீன்னான். உடனே ஒரு போன் அடிக்கிற சத்தம். அவன் அதுல  ;சரிசரி அப்படியே செய்றன். யார் யாருன்னு பேர் சொல்லுங்க. குறிச்சிக்கிறேன் ; ன்னு சொல்லிட்டு அந்த மருந்த ஜன்னல் ஓரமா வச்சிட்டு பேர குறிச்சான். அவன் வெற்றிவேல் சக்திவேல் தமிழன்பன் ஜெயராமன் ஜெகதீசன் அப்படின்னு சொல்லிக்கினே குறிச்சிட்டு  ;சரிசரி ஆறு பேரையும் குறிச்சிட்டேன். நேரா நா மாந்தூருக்குப் போயிடுறேன். நாம மாட்டுவண்டி போட்டியில பாத்துகலாம் ; ன்னு சொல்லிட்டு மருந்த எடுத்துகினு போயிட்டான்.
   நா அப்பவே அந்த மருந்து பேர மனசுல குறிச்சிகினேன். டாக்டர்கிட்ட மருந்து பேரைச்சொல்லி விசாரிச்சேன். அந்த மருந்து மாடு குதிரைக்கி அறுவை சிகிச்சைக்கு போடுற மயக்க மருந்தாம். அத ஊசி வழியா போட்டதும் விலங்குகள் தொடக்கத்துல சுறுசுறுப்பா இருக்குமாம். ஆனா கொஞ்ச நேரம் போகப் போக கொஞ்சம் கொஞ்சமாத் தொவண்டு போயிடுமாம். சொன்னார். அதனாலத்தான் நான் மாந்தூருக்கு போனேன். ஆனா அந்த ஆளுங்கள பாக்கமுடியல." கவலையாகச் சொல்லி முடித்தாள்.
   அங்கே சற்று நேரம் அமைதி நிலவியது. அனைவருமே இதைக் குறித்து யோசித்துக் கொண்டிருந்தார்கள். சக்திவேல் தான் அமைதியைக் கலைத்தான்.
   'ரொம்ப நன்றி மீனா. இந்தத் தகவலைத் தெரிஞ்சிகினு வந்து சரியான நேரத்துல எங்ககிட்ட சொன்னதுக்காக..! ஆமா... கண்மணிய ஒனக்கு எப்படி தெரியும்? "
   'நானும் அவளும் ஒரு கல்சுரல் ப்ரோகிராம்ல சந்திச்ச பழக்கம் தான். நான் ஆசிரமத்துல தங்கிப் படிக்கிறேன்னு மட்டும் அவளுக்குத் தெரியும். ஆமா சக்திவேல்..... எதுக்காக உங்கள விரும்புன கண்மணிய கைவிட்டீங்க? ஊர் நல்லதுக்காகவா.....? இல்ல.... அந்த வெற்றிவேலுக்கு பயந்தா.....?"
   கோபமாகவே கேட்டாள். அவள் வீட்டிற்கு வந்ததும் கண்மணி சொன்னதையும் அங்கே நடந்ததையும் குறித்து நிறைய யோசித்துக் கண்மணிக்காக நிச்சயம் இதைச் சக்திவேலுவிடம் கேட்க வேண்டும் என மனத்தில் கணக்குப் போட்டு இருந்தாள்.
   ஆனால் சக்திவேல் உடனே பதில் சொல்லவில்லை. சற்று நேரம் கழித்து மெதுவாகச் சொன்னான்.
   'மீனா..... நான் கண்மணியை விரும்பலை. அது தான் உண்மையான காரணம்;." என்றான்.
   இந்தப் பதிலை அவள் மனம் ஏற்கவில்லை.
   'ஏன் அவளுக்கு அழகில்லையா....? படிப்பில்லையா....? பணம் சொத்து இல்லையா...? சொந்த பந்தமில்லையா....? எதுயில்ல. நீங்க வேணான்னு சொல்லுறதுக்கு? இதுக்கும் அவ உங்களுக்குச் சொந்தம் வேற. உங்க ஜாதகப்படி அமையிற எல்லா தகுதியும் அவளுக்கு இருக்கும் போது எதுக்காக அவள வேணாம்ன்னு சொன்னீங்க?"
   மனம் ஆறாமையால் கேட்டாள்.
   அவள் கேள்வியிலும் நியாயம் இருக்கத்தான் செய்தது. கேள்வியில் நியாயம் இருக்க பதிலில் மட்டும் நியாயம் இல்லாமலா போய் விடும்?
   சக்திவேல் தன் பதிலைச் சொன்னான். 'என் மனசுல வேற ஒரு பெண் இருக்கிறாள்" என்று!
   அவனின் இந்தப் பதில் அவளை அதிர்ச்சியுடன் யோசிக்க வைத்தது. அவனின் பதில் அவளுக்கு இரண்டு வகையில் ஏமாற்றத்தைத் தந்தது. அவள் எதுவும் பேசாமல் இருந்ததைக் கவனித்த அவன் பேச்சை மாற்றினான்.
   'மீனா நாளைக்கி போட்டியில என்ன விபரிதம் இருக்குன்னு உன்மூலமா தெரிஞ்சிடுச்சி. நாளைக்கி போட்டியில கலந்து நிச்சயம் நான் தான் ஜெயிப்பேன். அப்படி ஜெயிச்சா நீ எனக்கு என்ன பரிசு தருவே.....?"
   மீனா யோசித்தாள். அவனை நேராகப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இன்னும் அதிகமாகத் தான் இருந்தது. அதற்கேற்றார் போல் பதில் சொன்னாள்.
   'நீங்க ஜெயிச்சா உங்க முகத்தப் பாத்து உங்களுக்கு ஒரு மாலை போடுவேன். இது தான் என்னோட பரிசு." என்றாள்.
   'நி;ச்சயம் நிறைவேறும்." என்றான் அவன்.
   தான் வந்த வேலை முடிந்து விட்டது என்று எழுந்தவள் திரும்பவும் யோசனையுடன் அமர்ந்தாள்.
   'உங்களுக்கு என்ன விபரீதம் இருக்குன்னு தெரிஞ்ச் போச்சி. ஆனா மத்த அஞ்சி பேரோட கதி.....?"
   கவலையாகக் கேட்டாள்.
   'நீ சொன்ன அந்த நாலுப் போருக்கும் எச்சரிக்கை கொடுத்திடலாம்"
   'ஆனா... அந்த கடைசி ஆளுக்கு..? யாரா இருக்கும்....?"
   'வேற யார்? நம்ம சின்னதம்பி தான்."
   'சின்னதம்பியா.....?"
   அப்பொழுது தான் அவள் கண்கள் சுற்றும் முற்றும் தேடின. அங்கே இருந்த ஏழு ஆண்களில் சின்னதம்பி இல்லை!
   'அப்போ அவருக்கும் சொல்லிடுவீங்க இல்லையா....?"
   'இல்ல. அவனுக்கு சொல்லப் போறது இல்ல. நீங்களும் யாரும் சொல்லாதீங்க." என்றான் கோபமாக.
   'ஏன்.....?" மீனா அதிர்ச்சியாகக் கேட்டாள். சக்திவேல் இப்படி சொல்லுவார் என்று அவள் எதிர் பார்;க்கவில்லை.
   'ஏனா.....? அவன் வரவர என்னோட பேச்சியையே கேக்குறதில்ல. அவன் போக்கே சரியில்ல. எல்லாம் அவனிஷ்டபடித்தான் நடந்துகிறான். ஒங்கிட்டக் கூட மறியாதை இல்லாம நடந்திருக்கிறான். காலையில உன்ன அடிச்சி கையைபுடிச்சி இழுத்து இருக்கான். மதியானம் உன் மேல மஞ்சத்தண்ணிய ஊத்தியிருக்கான். எங்க அவன் என்ன மதிக்கிறான்? ஒருமுற பட்டாத்தான் திருந்துவான். இது தான் சரியான நேரம். படட்டும்."
   அவன் குரலில் கோபத்தின் அழுத்தம் தெரிந்தது.
   மீனா நெற்றியில் புதியதாகப் ப+த்தவியர்வைத் துளிகளைத் துடைத்தாள்.
   'இதயெல்லாம் உங்கக் கிட்ட யார் சொன்னாங்க?" மெதுவாகக் கேட்டாள்.
   'என்ன சுத்தி ஆயிரம் கண்ணுங்க இருக்குது மீனா. இந்த ஊரு மட்டுமில்ல. என்னை சுத்தியிருக்கிற எட்டு கிராமத்துலையும் எனக்கு வேண்டிய கண்கள் இருக்குது. எங்க எது நடந்தாலும் எனக்கு தகவல் வந்திடும். அதுக்கு இன்னைக்கி நீயே ஒரு சாட்சி." என்றான்.
   ஒரு பெரிய அரசனுக்கு ஒற்றர் படை இருக்குமாம். அந்த ஒற்றர் படையில் இன்று தானும் ஒருத்தியாக இருந்திருக்கிறோமே என்று நினைத்து கொண்டு சிரித்தாள். ஆனால் சின்னதம்பியின் நினைவு வந்தது.
   'சக்திவேல் நீங்க அவரை இப்படி தண்டிப்பதுல்ல எனக்கு உடன்பாடு இல்ல." என்றாள் மிக மெதுவாக.
   'அப்படின்னா நீ அவனை விரும்புறியா.....?"
   அவர் சட்டென்று இப்படிக் கேட்பார் என்று அவள் நினைக்கவில்லை. அவளால் உடனே பதிலும் சொல்ல முடியவில்லை. என்ன சொல்லலாம்...? ஆனால் ஏதாவது சொல்லியாக வேண்டும். சொன்னாள்.
   'நான் அவர விரும்பறதும் விரும்பாததும் வேற விசயம். அதுக்காக நீங்க அவர மட்டும் தண்டிக்கிறது நியாயம் இல்லை."
   கோபத்தில் மனத்தில் இருப்பது தானே வார்த்தையில் தவறி வெளியே வரும்! அவளையுமறியாமல் வெளிவந்து விழுந்த வார்த்தைகள்.....!
   'அப்படின்னா.....?" அவர் யோசனையுடன் கேட்டார்.
   'அப்படித்தான்." சொல்லிவிட்டு  அந்த இடத்தைவிட்டு உடனே வெளியேறினாள். அதற்கு மேல் தான் அங்கே இருந்தால் நிச்சயம் ஏதாவது உளறிக் கொட்டிவிடுவோம் என்ற பயம் தான் காரணம்.
    அவள் முகம் சிவக்க ஓடியதும் அங்கே சக்திவேலாக அமர்ந்திருந்தவன் சிரித்து கொண்டே சுழல் நாற்காலியைத் திருப்பினான். அவன் வேறு யாருமில்லை. சாட்சாத் நம்ம சின்னதம்பியே தான்!!!
   'என்னண்ணா... மீனாவ இப்படி கொழப்பிட்டிங்க?"
   மாதவன் கேட்க சக்திவேல் சிரித்தான்.
   'நல்லா கொழம்பட்டும். இந்த கொழப்பம் நாளைக்கி வரைக்கும் தானே....? அது வரையிலும் நல்லா கொழம்பட்டும். மொகத்தையே பாக்காத சக்திவேலை விரும்புறாளாம்...... ஆனா அவளுக்காகவே எல்லாம் செய்யிற அவள விரும்புற சின்னதம்பிய வெறுக்கிறாங்களாம். சின்னதம்பி மேல இருக்கிற காதலை வெளிப்படையா சொல்ல வக்கிறேன் பாருங்க. இன்னைக்கி அவ சின்னதம்பிய நெனச்சி தூங்கவே கூடாது. நிச்சயம் தூங்கவே மாட்டா....." என்றான் சக்திவேல்.
   'பாவம் மீனா.... அவள நிங்க ரொம்ப ஏமாத்துறீங்க."
   'நானா ஏமாத்தினேன்? அவளே ஏமாற்றா. என்னோட தப்புயில்லையே..... சரி நாளைக்கி வரைக்கும் தானே. எனக்கும் அவ மேலமேல ஏமாற்றது புடிக்கல. எப்படியும் அவ சின்னதம்பிய காப்பாத்த ஏதாவது முயற்சி பண்ணுவா. என்னன்னு தான் தெரியல. பாப்போம்....."
   அவன் அதற்கு மேல் மகிழ்ச்சிக் கடலில் மிதந்தான்.


                         (தொடரும்)